செய்திகள்

ஆங்கில நாடக நடிகர் பி.சி.ராமகிருஷ்ணா, கிரேசி ட்ரூப் ‘அப்பா’ ரமேஷுக்கு விருது

யக்ஞராமன் நிகழ்த்து கலை மையம், ஸ்ரீகிருஷ்ண கான சபா சார்பில் சென்னையில் நேற்று நடந்த 27வது ஆண்டு நாடக விழாவின் நிறைவு விழா நடந்தது. இதில், ஆங்கில நாடக நடிகர் பி.சி.ராமகிருஷ்ணாவுக்கு ‘நாடக சூடாமணி’ விருதும், ‘கிரேசி’ மோகன் குழுவில் நடிகர் ‘நாடகத் தென்றல்’ ‘அப்பா’ ரமேஷுக்கு சிறந்த பங்களிப்புக்கான கே.பாலசந்தர் விருதும் வழங்கப்பட்டன. எழுத்தாளர் சிவசங்கரி, பி.எஸ். கல்விச் சங்கத்தின் செயலாளர் கே.வி.எஸ். கோபாலகிருஷ்ணன், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஸ்ரீகிருஷ்ண கான சபா அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி சாஸ்வதி பிரபு ஆகியோர் உடன் உள்ளனர்.

விருது பெற்ற இருவருக்கும் பிரபல நாட்டியக் கலைஞர் லட்சுமி ராமசாமி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். விழா முடிவில் காத்தாடி ராமமூர்த்தி குழுவின் ‘நம்ம வீடு’ நகைச்சுவை நாடகம் நடந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *