செய்திகள்

ஆங்கிலேயர் கொடியை இறக்கி இந்திய தேசியக் கொடி ஏற்றிய அருப்புக்கோட்டை தியாகி காமாட்சி

Makkal Kural Official

ஆர்.வசந்தா


நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்ததற்கு பலரும் தியாகங்கள் பல புரிந்தனர். இந்தியாவில் உள்ள அனைத்து ஊர்களிலும் யாராவது ஒருவர் சுதந்திர தாகம் கொண்டு தங்களால் ஆன செயல்களை செய்திருப்பார்கள். ராமர் பாலம் கட்ட அணில் ஒரு சிறு மணலை அர்ப்பணித்தது போலாகும்.

எழுத்தாளர் ஆர்.வசந்தா

இந்த தாகம் கொண்ட ஒருவரைப் பற்றி நாம் தெரிந்து கொள்வோம். அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சின்ன புளியம்பட்டியில் பிறந்த திரு.காமாட்சி என்பவரைப் பற்றிய சிறிய துளிச் செய்தியாகும்.

1942–ல் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டத்தை ஆரம்பித்து மக்களை அதற்கு கட்டுப்பட்டு தங்களால் முடிந்ததைச் செய்யக் குரல் கொடுத்தார். இது நாடெங்கும் கடைபிடிக்கப்பட்டது.

இந்த செய்தியை நம் சுதந்திர தாகம் கொண்ட காமாட்சி உடனே செயல்படுத்த முடிவெடுத்தார்.

அப்போது காமாட்சி 9 ம் வகுப்பு ( 4–வது பாரம்) படிக்கும் மாணவன் பள்ளி நேரத்தில் ஆங்கிலேயக் கோடிக் கம்பத்திலிருந்து ஆங்கிலேயக் கோடியை இறக்கிவிட்டு நம் இந்திய தேசியக் கொடியை ஏற்றினான். கோபம் கொண்ட தலைமை ஆசிரியர் மாணவனை அடித்து இறக்கி விட்டு பள்ளியிலிந்தும் அவரை நீக்கி விட்டார்கள். படிப்பும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனாலும் அவரின் சமூகத்தின் மீது இருந்த சேவை மனப்பாங்கு அவரை விட்டு நீங்கவில்லை.

ஒரு சமூகப் பெண்களை கேவலமாகப் பேசியதை கண்டிக்கும் விதமாக ஒரு பெரிய கண்டன ஊர்வலம் அவர் தலைமையில் நடத்திக் காட்டினார். அது ஊரையே மிரள வைத்தது.

அப்பொழுது தக்களி பீரியட் என்ற ஒன்று இருக்கும். பள்ளி மாவணவர்கள் பஞ்சில் நூற்பது வழக்கம். அந்த நூலைச்சுற்றிச் சிட்டமாக போடுவது வழக்கம். சிட்டம் என்றால் 80 கண்ணி என்று சொல்லுவார்கள். அதை காமாட்சி அவர்களிடம் கொடுத்து விட்டால் அதற்குரிய பணத்தை மாணவ மாணவியர்க்கு கொடுப்பார். இது பெரிய சமூக சேவையாகும்.

பூதான இயக்கம் காரணமாக அருப்புக் கோட்டைக்கு வினோபாவேயை வரவழைத்த பெருமையும் அவரைச் சேரும். அவரை நேரில் பார்த்த மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். நீண்ட நெடிய உயரம் சிறவந்த நிறம் வெகு வேகமான நடை ;இந்தியா முழுவதும் நடந்தார் என்றால் எப்பேர்பட்ட மனிதர். அதுவும் தமிழ்நாட்டில் உள்ள சிறிய ஒரு ஊருக்கும் வந்தார் என்றால் அந்த ஊருக்கு அவர் நடைப் பயணம் மேற்கொண்டார் என்றால் அந்த ஊருக்கு எவ்வளவு பெருமை.

காமாட்சி அந்த ஊரின் மண்டலக் காங்கிரஸ் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். சென்னை ஆவடியில் நடந்த மகாநாட்டில் சிறப்பு விருந்தினராகவும் கலந்துக் கொண்டார். அப்போது நேரு முக்கிய முடிவுகளை எடுத்தார்.

ஆர். வெங்கட்ராமனை சின்னப் புளியம் பட்டியில் உள்ள ஒரு சங்கத்திற்கு வரவழைத்த பெருமையும் அவரைச் சேரும். அவர் பின்னாளில் மந்திரியாகவும் ஜனாதிபதியாகவும் செயல்பட்டார்.

சின்ன புளியம் பட்டியில் உள்ள ஒரு தெரு மகிவும் மோசமாக இருக்கும். நடுவில் சாக்கடை ஓடும். அவரவர் வீட்டின் முன்னால் படிபோல் கற்களை அடுக்கி வைத்திருப்பார்கள். பாம்பும் நட்டுவாக்காளியும் சகஜமாக இருக்கும். நம் காமாட்சிதான் அந்த தெரு வீதிகளை சிமிண்ட் ரோடாக மாற்ற பெரும் முயற்சி செய்து வெற்றியும் அடைந்தார். இன்றளவும் அந்த சிமிண்ட் ரோடு நல்ல முறையில் உள்ளது.

மேலும் அமெரிக்காவிலிருந்து நிதி உதவியாக வரும், பால் பவுடர், காட்டன் விதை எண்ணெய் போன்றவற்றை இலவசமாக அளிக்க ஏற்பாடு செய்தார். மக்கள் பெரிதும் பயன் அடைந்தார். மேலும் மக்கள் நலம் கருதி கைக்குத்தல் அரிசி தயாரிக்கவும் ஏற்பாடு செய்தார். அது பலரின் நோய்களையும் தீர்க்க உதவியாக இருந்தது.

படிப்பு என்று பணம் கேட்டால் உடனே உதவி செய்தார். நெருங்கிய உறவினர் வீட்டு பையன் இன்ஜினீயர் சீட் கிடைத்தது. ஆனால் பீஸ் கட்ட பணமில்லை. அந்தபையன் தயங்கியபடி பணம் கட்ட பணம் இல்லை என்று சொல்லியிருக்கிறான்.

அப்போதுதான் இறங்கிய ஒரு பெரிய டின்னை (400 ரூபாய்) பக்கத்து கடையில் வாங்கிய விலைக்கே கொடுத்து அந்தப் பணத்தை உடனே பீஸ்கட்ட அன்புடன் சொன்னார். முதல் மாணவனகாக இருந்த அந்த மாணவர் புளியம்பட்டி கிராமத்தின் முதன் முதல் இன்ஜினீயராகவும் திகழ்ந்தான்.

காமராஜின் அன்பிற்கும் பாத்தியமானார். காமராஜர் ஊர்வலமாகப் போனபோது காமாட்சியைப் பார்த்ததும் காரை போகச் செய்து காமாட்சியைப் பார்த்து வணங்கினார்.

கிராமத்தின் நடுவில் இருந்த பொட்டல் கடை என்ற பெயரில் இருந்த இடத்தை காந்தி மைதானம் என்றும் மாற்ற ஏற்பாடு செய்தார்.

பொதுவாக கமலாநேரு புகைப்படம் காண்பது அரிது. ஆனால் காமாட்சி வீட்டில் மட்டும் இருக்கும். தன் அண்ணன் மகளுக்கு கமலா என்று பெயரிட்டார். தன் மகளுக்கு இந்திரா காந்தி என்றும் அன்புடன் பெயரிட்டார். அவர் எப்போதுமே கதரலான ஆடைதான் அணிந்தார்.இதெல்லாம் சுதந்திர தாகத்தின் அடையாளங்கள்.

மற்றொரு சுதந்திர தாகம் கொண்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் பெயரே யாருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை காந்தித் தாத்தா என்றே அழைப்பார்கள்.சாயங்காலம் 4 மணி அளவில் வேர்க்கடலை விற்க வருவார். தலையில் ஒரு பேசினை வைத்துக் கொள்வார். கடலை என்று கூவி வருவார். மாலையே வேர்கடலை முழுவதும் விற்று தீர்ந்துவிடும். அவர் கடலை மிகவும் ருசியாகவும் இருக்கும். சிறுவர்கள் அனைவருக்கும் காலணா அரையணா என்று வாங்குவார்கள். அவர் உருவமும் காந்தி சாயலிலேயே இருக்கும்.

இதுபோல் எல்லா ஊர்களிலும் சுதந்திர தாகம் கொண்டவர்கள் இருப்பார்கள். நம்முடைய அரசாங்கம் இவரைகளைப் போன்ற நபர்களை மதித்து பாராட்டி நிலப்பட்டாங்கள் வழங்கியது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *