செய்திகள்

ஆக 30- தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைவு

சென்னை, ஆக.30–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து, சவரன் ரூ.35,904 க்கு விற்பனையாகிறது.

கடந்த மாதத்தில் ரூ.36 ஆயிரம் வரையில் இருந்த தங்கம் விலை, இம்மாத தொடக்கத்தில் அதிரடியாக சரிந்தது. ஒரு சில நாட்களிலேயே ஆயிரம் ரூபாய்க்கு மேல் சரிந்து ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் சென்றது. ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தங்கம் விலை அதிகரித்து ரூ.36 ஆயிரத்தை எட்டிவிட்டது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.152 குறைந்துள்ளது.

ரூ.152 குறைவு

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 குறைந்து ரூ.4,488 க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.152 குறைந்து ரூ.35,904 க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.40 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,400 க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *