செய்திகள்

ஆக 28: ரூ.36 ஆயிரத்தை தொட்ட தங்கம் விலை, சவரனுக்கு ரூ.384 உயர்வு

சென்னை, ஆக. 28–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 அதிகரித்து, மீண்டும் சவரன் ரூ.36 ஆயிரத்தை தொட்டுள்ளது.

இம்மாத தொடக்கத்தில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிவைக் கண்டு ரூ.35 ஆயிரத்துக்குக் கீழ் விற்பனையானது. ஒரு சில நாட்களிலேயே தங்கம் விலை ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்ததால், சாமானிய மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சவரனுக்கு ரூ.384 உயர்வு

ஆனால், அடுத்தடுத்த வாரங்களில் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. தங்கம் விலை மீண்டும் ரூ.35 ஆயிரத்தை எட்டியது. அதன் பிறகு, தொடர்ச்சியாக அதிகரித்து வந்த தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.384 உயர்ந்து ரூ.36 ஆயிரத்தை எட்டியுள்ளது.

இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 அதிகரித்து ரூ.4,507 க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.384 அதிகரித்து ரூ.36,056 க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.68.70 க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.68,700 க்கும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *