செய்திகள்

ஆக. 16: தமிழகத்தில் நேற்று 1,896 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, ஆக.16-

தமிழகத்தில் நேற்று 1,896 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 56 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,090 ஆண்கள், 806 பெண்கள் என மொத்தம் 1,896 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 225 பேரும், சென்னையில் 216 பேரும், ஈரோட்டில் 179 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறைந்தபட்சமாக ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடியில் தலா 5 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 89 லட்சத்து 20 ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 15 லட்சத்து 11 ஆயிரத்து 982 ஆண்களும், 10 லட்சத்து 76 ஆயிரத்து 761 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 25 லட்சத்து 88 ஆயிரத்து 781 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 6 நாட்களில் 12 வயதுக்கு உட்பட்ட 675 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 19 பேரும், தனியார் மருத்துவமனையில் 4 பேரும் என 23 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 34 ஆயிரத்து 519 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 1,842 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 25 லட்சத்து 33 ஆயிரத்து 804 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 20 ஆயிரத்து 458 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 39 ஆயிரத்து 370 ஆக்சிஜன் படுக்கைகள், 23 ஆயிரத்து 804 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 675 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 70,849 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *