செய்திகள்

‘ஆகாஷ் பிரைம்’ ஏவுகணை சோதனை: இலக்கை துல்லியமாக தாக்கி வெற்றி

புவனேஸ்வர், செப். 28–

‘ஆகாஷ் ப்ரைம்’ ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக நடைபெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு, இந்திய ராணுவத்திற்கு போர் தளவாடங்களை தயாரித்து கொடுத்து வருகிறது. அந்த வகையில், ஆகாஷ் ப்ரைம் என்ற ஏவுகணையை டிஆர்டிஓ அண்மையில் வடிவமைத்துள்ளது.

சோதனை வெற்றி

தரையிலிருந்து ஆளில்லா விமான இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஒடிசாவின் சாந்திப்பூரில் நேற்று மாலை 5 மணி அளவில் பரிசோதிக்கப்பட்டது. அப்போது, எதிரிகளின் இலக்கைப் போன்ற ஒரு குறிப்பிட்ட இலக்கை, துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த நிலையில் ஆகாஷ் பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக டி.ஆர்.டி.ஓ. தெரிவித்துள்ளது.

ஆகாஷ் பிரைம் ஏவுகணையை மேம்படுத்திய பின், விமானத்தில் இருந்து பரிசோதிக்க டி.ஆர்.டி.ஓ. திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், ஆகாஷ் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதற்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

டிஆர்டிஓ தலைவர் டாக்டர் ஜி. சதீஷ் ரெட்டி கூறுகையில், ஆகாஷ் பிரைம் ஏவுகணை இந்திய இராணுவம் மற்றும் இந்திய விமானப்படையின் நம்பிக்கையை அதிகரிக்கும் என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *