டெல்லி, ஜூலை 11–
அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் தற்போது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், எடப்பாடி, பன்னீர் ஒன்றாகப் பணியாற்றி வந்த நிலையில், ஒற்றைத் தலைமை விவகாரம் பெரிதாக வெடித்தது. பலதரப்பட்ட சட்டப் போராட்டங்களுக்கு மத்தியில் அண்ணா தி.மு.க பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் உத்தரவிட்டது.
எடப்பாடி பழனிசாமி
ஆனாலும் தேர்தல் ஆணையம் இந்த விவகாரத்தில் இறுதிக்கட்ட முடிவெடுக்காமல் இருந்து வந்தது. இந்த நிலையில்தான் அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம். இதனை தற்போது தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறது.