சிறுகதை

அவளும் நானும் | கோவிந்தராம்

அமுதாவும் அர்ஜுனும் இணைபிரியா காதலர்கள்.

இவர்கள் இணைவதற்கு முக்கியக் காரணம் கவிதைகள்தான்.

ஆரம்பத்தில் இவர்களின் காதல் நேரில் சந்திக்காமலேயே உதயமானது.

ஒரு பத்திரிகையின் வார இதழ் மூலம் தான் தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் அமுதா ஒரு கவிதை எழுதுவாள்.

அடுத்த வாரம் அவர் அர்ஜுன் அவள் கவிதைக்குப் பதில் கவிதை

எழுதுவான் .இது வழக்கமான பின் ஒருநாள் இருவரும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அமுதா தன் தோழிகளுடன் ஒரு ஹோட்டலில் அர்ஜூனை சந்திக்க நேர்ந்தது. அது அந்த நேரத்தில் தோழி அர்ஜுன் எழுதிய கவிதையைப் பற்றி பேச ஆரம்பித்த போது அர்ஜுன் அவளிடம் சென்று அமுதா தானே நீங்கள் என்று ஆசையுடன் பேசினான்.

அப்படி என்றால் நீங்கள் தானே அந்த அர்ஜுன் என்றாள்.

ஆம் என்றதும் அந்த தோழி நேராக அர்ஜுனை அழைத்துக்கொண்டு அமுதாவிடம் சென்று உன் காதலனைக் கண்டுபிடித்துவிட்டேன் என்று சொல்லி அர்ஜுன் அமுதாவிடம் அறிமுகம் செய்து வைத்தாள்.

உடனே அமுதாவும் அர்ஜுனன் தோழிக்கு நன்றி சொன்னார்கள்.

அதன் பின் தினமும் வாட்ஸ்அப், பேஸ்புக், சர்ட்டிங் மூலம் பேசியும் பழக ஆரம்பித்தார்கள். ஒரு நாள் கூட இருவரும் பேசாமல் கவிதைகளைப் பரிமாறிக் கொள்ளாமல் இருந்ததில்லை.

திடீரென்று இரண்டு நாட்களாக அமுதாவிடமிருந்து எந்த தகவலும் வராமல் இருந்ததால் அர்ஜுனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான். அவளது தோழியை சந்தித்து தகவலைத் தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் சென்று பார்த்தான். அன்று தோழியும் கல்லூரிக்கு வரவில்லை. ஏமாற்றத்துடன் இருந்த அர்ஜுனனுக்கு இரண்டு மூன்று நாட்கள் கழித்து அமுதா போனில் பேசினாள்.

அமுதா நீ இப்போது எங்கே இருக்கிறாய் ? நான் உடனே உன்னைப்பார்க்க வேண்டும். அர்ஜுன் நீ ரொம்ப அவசரப்படுறே. கொஞ்சம் பொறுமையா இரு. நான் இப்போது ஊருக்குத் தான் திரும்பி வந்து கொண்டிருக்கிறேன்.

நாளை நேரில் சந்திப்போம் என்றாள்.

நாளைக்கு எங்கு எப்போது சந்திக்கலாம் என்றான்.

நான் என் தோழியோடு வந்து உன்னை எப்போதும் சந்திக்கும் இடத்தில் சந்திக்கிறேன் என்றாள்.

அர்ஜுன் நாளை எப்போது அந்த நேரம் வரும் என்று

காத்திருந்தான் .

அந்த நாளும் வந்தது.

அமுதா இனிமேல் எனக்குத் தகவல் சொல்லாமல் நீ எங்கும் போகக்கூடாது. எனக்கு தெரிவிக்க வேண்டும் என்றான்.

என் குடும்பத்தோடு நான் சில தினங்கள் ஒரு இடத்திற்குச் செல்ல வேண்டிய வேலை இருக்கு என்றாள்,

என்ன முக்கியமான வேலை, எங்கு செல்லப் போகிறாய் செல்லும் போது உனக்கு தகவல் சொல்லி விட்டுப் போகிறேன் என்றதும் அர்ஜுன் மொனமானான். போகும்போது அமுதா அர்ஜுனிடம் என் போனுக்கு ரீ சார்ஜ் செய்ய வேண்டும் என்ற தகவலை சொல்லி விட்டு புறப்பட்டாள்.

அர்ஜூன் ரீ சார்ஜ் செய்ய மறந்து விட்டான்.

அமுதாவிற்கு வீடியோ கால் போட்டான். அமுதா தன் தாயுடன் நின்றிருந்ததால் போனை கட் செய்துவிட்டான். பின் தோழிக்குப் போன் செய்தான். அவள் அமுதா எங்கு போகப் போகிறாள் என்ற தகவலை சொன்னான்.

அதிர்ச்சி அடைந்த அர்ஜுன் எப்படி அமுதா தன்னை விட்டு வேறு ஒருவனுக்கு தைரியமாக மாப்பிள்ளை பார்க்க சம்மதித்தாள் என்று யோசனை செய்யத் தொடங்கினான் கவிதை மொழியாய் செய்தியை அனுப்பினான்.

பின்னால் பார்த்தால் வரவில்லை. முன்னால் பார்த்திருந்தால் வந்திருப்பேன். சார்ஜ் செய்திருந்தால் சென்றிருக்க மாட்டேன். சார்ஜ் செய்யாததால் போனேன்.

நீ வந்திருந்தால் போயிருக்க மாட்டேன். நீ வராததால் தான் போனேன் என்று பதில் வந்தது.

வீடியோ காலில் உன்னைப் பார்க்கும் போது உன் அம்மா உன் பின்னால் நின்றிருந்தார்கள்.

அதனால் வரவில்லை என்றான்.

நீ சார்ஜ் செய்திருந்தால் நான் போயிருக்க மாட்டேன் என்றாள்.

நீ சம்மதம் சொல்லியிருந்தால் நான் வந்திருக்க மாட்டேன். நீ சம்மதம் சொல்லாததால் தான் உன்னைப் பார்க்கவந்திருக்கிறேன் என்றான்.

இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும் என்றாள்.

எல்லாம் உன் தோழி மூலம் அறிந்ததுதான் என்றான்.

அப்படி என்றால் என் மீது என் மீது உனக்கு முழு நம்பிக்கை இல்லையா என்றாள்.

நம்பிக்கை இருந்தது ஆனால் உன் பெற்றோர் மீது தான் எனக்கு நம்பிக்கை இல்லை என்றான்.

இப்போதாவது நம்பிக்கை வந்துவிட்டதா என்றாள்.

எப்போதும் உன் மீது நம்பிக்கை உண்டு என்று புதிய கவிதையைச் சொல்ல ஆரம்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *