செய்திகள் வாழ்வியல்

அவரைக்காய் சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து நிரந்தரமாக விடுபடலாம்

Makkal Kural Official

நல்வாழ்வுச் சிந்தனைகள்


உணவில் அவரைக்காய் சேர்த்து கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மேலும் அவரைக்காயில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் செரிமானம் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. சத்துக்கள் அதிகம் இருப்பதால், உணவில் அடிக்கடி இதை சேர்த்து கொண்டால் உடலில் உள்ள சோர்வை நீக்கி புத்துணர்ச்சியுடன் செயல்பட உதவும்.

பித்தத்தினால் உண்டாகும் கண் சூடு, கண் பார்வை மங்கல் போன்ற கண் பாதிப்புகளுக்கு அவரைக்காய் சிறந்த மருந்தாகும். அவரைக்காயில் கால்சியம் சத்து அதிகமாக இருப்பதால் வாரம் ஒரு முறை அல்லது இருமுறை அவரைக்காய் சாப்பிட்டு வந்தால் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். அவரைக்காயில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதால் இதய நோய்களில் இருந்து நம்மை காக்கிறது.

அவரைப் பிஞ்சை வாரம் இருமுறை சமைத்து உண்டுவந்தால் பித்தம் குறைந்து, கண் நரம்புகள் குளிர்சியடைந்து மங்கிய பார்வை தெளிவடையும். அவரைக்காயை அதிகம் உண்டுவந்தால் வெள்ளெழுத்துக் குறைபாடுகள் நீங்கும்.

அவரைப் பிஞ்சில் துவர்ப்புச் சுவை உள்ளதால் இத் ரத்தத்தைச் சுத்தபடுத்தும். ரத்த நாளங்களில் உள்ள கொழுப்பைக் குறைக்கும். ரத்த அழுத்தம், இதயநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. சக்கரைநோய் உள்ளவர்கள் அவரைக்காயை அதிகம் சேர்த்துக் கொண்டால், சர்க்கரை நோயால் உண்டாகும் மயக்கம், தலைசுற்றல், கை, கால் மரத்துப்போதல் போன்றவை கட்டுப்படும்.

உணவு கட்டுப்பாட்டுடன் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைக்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், அதிகளவில் உணவில் அவரைக்காயை சேர்த்து கொள்ள வேண்டும்.ஏனென்றால் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை குறைத்து விடும். வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

அவரைக்காய் மலச்சிக்கலைப் போக்கும், வயிற்றுப் பொருமலை நீக்கும். மூலநோய் தாக்கம் உள்ளவர்கள் அவரைக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது. இது சிறுநீரைப் பெருக்கும், சளி, இருமலைப் போக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *