இராமன் பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் அவன் இந்த ஒரு மாதமாக விடுமுறையன்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் எங்கோ போய் விட்டு வருகிறான். வீட்டில் பெற்றோரிடமும் சொல்வதுமில்லை; அவனைப் பற்றி பெற்றோர் கவலைபடாத நாளில்லை; மகன் இராமனைப்பற்றி சிலர் அவர்களிடமே புகார் சொல்வர். உன் மகனை அங்கே பார்த்தோம்; இங்கே பார்த்தோம்; கண்டிச்சி வையுங்கள்; இல்லையின்னா கெட்டுப் போவான் என்று பெற்றோரிடம் கூறிவிட்டனர். இராமனின் பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை. ஞாயிற்றுக்கிழமை எங்கே போகிறான்; அதுவும் சொல்லாமல் போகிறானே ; தவறான வழிக்கு போறானோ? பெற்றோர் அவன் மீது ஆதங்கத்துடன் இருந்தனர். இன்னிக்கு வரட்டும் கேட்போம் என்று முடிவெடுத்து மகன் இராமனுக்காக காத்திருந்தனர்.
ஞாயிற்றுக் கிழமை மாலை நான்கு மணி இராமன் வழக்கம் போலவே எங்கேயோ போய் விட்டு வந்து காலணியை கழற்றி போடுகிறான்.…
அவன் எங்கே போகிறான்?
பேசத் தொடங்கிய அந்நேரத்தில் பக்கத்து வீட்டு பார்வதி பாட்டி வீட்டினுள் நுழைந்து நானும் தான் உன் மகன பாத்துட்டுத் தான் வர்றேன். இவனோட நாலு பசங்களும் சேர்ந்து வீடு வீடாக போயிட்டு வரறாங்க என்றுக் கூறியதும் இராமனுடைய பெற்றோருக்கு மேலும் கோபம் வந்தது. உண்மையைச் சொல்ல போறீயா இல்லையடா என்றுக் கேட்கவும் வேறு வழியில்லாமல் நடந்த விசயத்தை கூறத் தொடங்கினான் இராமன்
ஆமாம்பா நான் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சமூக நலப் பணிக்காக நானும் என்னோட ஸ்கூல் பசங்களும் சேர்ந்து போயிட்டு வர்றோம் என்றான் . இதைக் கேட்டதும் இராமனுடைய பெற்றோருக்கு ஒன்றும் புரியவில்லை; என்னடா சொல்றே சமூக நலப்பணிய ஆமாம் வீடு வீடா போயி குப்பையை பிரிச்சி கொடுக்குறது பத்தியும் பிளாஸ்டிக் பொருள பயன்படுத்த கூடாது என்பது பத்தியும் மஞ்சள் பையை உபயோகப் படுத்துறது பத்தியும் மரக் கன்று கள வளர வைக்க வேண முன்னு சொல்லிட்டு நோட்டீஸ் கொடுத்துட்டு வர்றோம் என்று சொன்னான். அப்போது இராமனுடைய பள்ளி வகுப்பாசிரியர் வீட்டுக்கு வந்தார். யாரும் இதை எதிர் பார்க்கவில்லை ; வந்தவர் என்னா இராமனச் சத்தம் போடுறீங்க; இப்படி ஒருபையன பெத்ததுக்கு பெருமைப் பட்டுக் கோங்க; மத்த பையன்கள போல இல்லாமல் சமுதாயத்துக்கு சேவை செய்றான் இவன். செல்போன நோண்டி பொழுதபோக்காம நல்லது செய்றானே அதை பாத்து சந்தோசபடுங்க. இதுக்காக இராமன பாராட்டி ஸ்கூல்ல பங்சன் வச்சிருக்கோம்; வாங்க , வந்து இராமன் பெருமையைத் தெரிஞ்சுக்கோங்க என்று வகுப்பாசிரியர் கூறியதும்
இராமனுடைய பெற்றோர் அவனை கட்டிபிடித்து ஆனந்த கண்ணீர் விட்டனர்.