செய்திகள்

அழகு முத்துக்கோன் சிலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

வீரம், தியாகத்துக்கு புகழஞ்சலி

சென்னை, ஜூலை 11–

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி சென்னை, எழும்பூர் ரெயில் நிலையம் அருகில் அமைந்துள்ள மாவீரன் அழகு முத்துக்கோனின் திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

விடுதலைக்கு வித்திட்ட சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துக்கோனின் வரலாறு, வீரம், தியாகம் போன்றவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில், அன்னாரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் தமிழ்நாடு அரசின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

வீரம் – அணையா நெருப்பு

மாவீரன் அழகு முத்துக்கோனின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:–

“பீரங்கி நெஞ்சைப் பிளந்தாலும் மன்னிப்பு கேட்க மாட்டேன், ஆங்கிலேயர்களுக்கு வரி கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை” எனச் சீறிய கட்டாலங்குளத்துச் சிங்கம் அழகுமுத்துக்கோனின் பிறந்தநாள் இன்று!

அவரது வீரம் அணையா நெருப்பாய்த் தமிழர்தம் நெஞ்சங்களில் என்றும் சுடர்விட்டுக் கொண்டேதான் இருக்கும்.

இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *