சென்னை, ஜூலை 12–
தமிழ்நாடு அரசு சார்பில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் அலுவலகத்தில், அதன் செயலாளர் தலைமையில் தேசிய மீன்வளர்ப்போர் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 10–-ம் நாள் தேசிய மீன்வளர்ப்போர் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் ஆணையர் இரா. கஜலட்சுமி துவக்கவுரை வழங்கி, மீன் உற்பத்தி அதிகரித்திட அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும், மீன்வளர்ப்போரை ஊக்குவிக்க அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அரசு செயலாளர் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் சிறந்த மீன்வளர்ப்போர்களுக்குவிருதுகள் வழங்கி கெளவுரவிக்கப்பட்டது. மேலும்மீனவ மகளிரின் பொருளாதாரத்தினை உயர்த்திடும் நோக்கில் தமிழ்நாடு மாநிலத்தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மூலம் நுண்கடன் வழங்கும் “அலைகள்” திட்டம் மற்றும் பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் பயனாளிகளுக்கு ரூ.22.74 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேலும், பஞ்சாயத்து குளங்களில் மீன்உற்பத்தியை அதிகரித்திட, மீன் மீன்வளர்ப்போர்களுக்கு மீன்விரலிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மீனவர்கள், மீன்வளர்ப்போர் மற்றும் மீனவ கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
![]()





