வாழ்வியல்

அலர்ஜி, ஆஸ்துமா , தலைவலி குணமாக என்ன செய்ய வேண்டும்?

தலையில் ஏற்படக் கூடிய எல்லா வியாதிகளுக்கும் தொண்டையில் இருக்கும் சிலேத்தும நீர் படலம்தான் முக்கிய காரணமாகும். அலர்ஜி, அடுக்குத் தும்மல், ஆஸ்துமா, சைனஸ், தலைவலி போன்ற வியாதிகள் எல்லாம் தனித்தனி வியாதிகளாக தோன்றினாலும், அவை அனைத்தும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையுது. தலை, கண், காது, மூக்கு, தொண்டை, சுவாசப் பை போன்ற உறுப்புகளில் ஏற்படும் அனைத்து நோய்களும் சிலேத்மம் என்ற குளிர்ச்சி மிகுதியால் ஏற்படுகின்றன.

மனிதனின் உடலில் சிலேத்மம் அதிகரித்து, கபால நீரானது தலையில் சேரும் போது தலைவலி, ஒரு பக்க தலைவலி, சளி, தும்மல், மூக்கடைப்பு மூக்கில் சதை வளர்ச்சி (பீனிசம்) என்ற சைனஸ், தொண்டை கோளாறுகள், சளி, இருமல், ஆஸ்துமா, சுவாசக் கோளாறுகள் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. வாத, பித்த சிலேத்மம் என்ற முத்தோஷ்ங்களின் வேறுபாடுகளினாலும், சிலேத்ம மிகுதியாலும் கபால நீராலும், கண், காது, மூக்கு, தலை சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் ஏற்படுகின்றன.

குளிர்ந்த நீரில் குளிப்பதாலும், குளிர் காற்றில் பனிக்காற்றில் வெளியே செல்வதாலும், குளிச்சியான உணவுகளை அதிகம் புசிப்பதாலும் கபால நீரானது தலையில் தங்கி தலை வலி ஒரு பக்க தலைவலி, பிடரி வலு, தலை பாரம், மண்டை இடி, சூரிய இடி, சூரியாவர்த்தம், சந்திராவர்த்தம் போன்ற பல விதமான தலை வலிகள் ஏற்படுகின்றன. இத்தகைய தலை வலிகளுக்கு ஊசி மருந்து மாத்திரைகள் சாப்பிட்டால் அப்போதைக்கு சற்று வலி குறையலாம்.

பிறகு மீண்டும் மீண்டும் தலை வலி வந்து கொண்டே தான் இருக்கும். ஏனென்றால் தலையில் தங்கியுள்ள கபால நீரை நீக்காமல் எவ்வளவு மருந்துகள் உட்கொண்டாலும் தலை வலி குணமாகாது. தலை வலிக்கான காரணங்களை ஆராயாமல் அதிகமான வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்வதால் குடல் புண், வாய் புண் போன்ற பக்க விளைவுகள் ஏற்படுமே தவிர தலை வலி குணமாகாது. எனவே சித்த மருத்துவ முறையில் தலையில் தங்கியுள்ள கபால நீரை நீக்குவதற்கான சீரோ வஸ்த்தி, தாரா சிகிச்சை, எண்ணெய் குளியல், நீராவிக் குளியல் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத மூலிகை மருந்துகளை கொண்டு சிகிச்சை பெறலாம்.

எவ்வளவு நாள்பட்ட தலைவலிகளானாலும், ஏழு நாள் சிகிச்சையில் பூரணமாக குணமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *