…
நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தன் மனைவி அமலாவை அந்த உணவு விடுதிக்குக் கூப்பிட்டு வந்தது தவறு என்று நினைத்துக் கொண்டிருந்தான் சங்கர்.
அவ்வளவு பெரிய உணவு விடுதி இல்லை என்றாலும் அவர்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் நல்ல உணவு விடுதி இது என்பதால் அங்கே சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று வந்த சங்கருக்கு கொஞ்சம் கோபம் வரத்தான் செய்தது.
சிறிய இடம் . வலது பக்கம், இடது பக்கம் என்று இரண்டு பக்கமும் டேபிள்கள் போடப்பட்ட இருக்களகள் .அதில் உள்ளே நுழைந்து அமலாவால் அமர்ந்து சாப்பிட முடியாது என்ற காரணத்திற்காகத் தான் காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆனால் ஏன் இந்த உணவு விடுதிக்கு வந்தோம் என்று வருத்தப்பட்டான் சங்கர் இல்ல சார் இப்ப எந்திரிச்சிடுவாங்க பத்து நிமிஷம் வெயிட் பண்ணுங்க என்று ஓட்டல் உரிமையாளர் சொன்னதைக் கேட்டு நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தாள் அமலா. எதிர் இருக்கும் இருக்கைக்குச் சொல்ல முடியாது நிறைமாத வயிறு தட்டும் என்பதற்காகத் தான் எதிர் திசையில் அமர்வதற்காக காத்திருந்தாள் அமலா.
ஆனால் எதிரில் இருக்கும் நபர்கள் சாப்பிடுவதை விட்டுவிட்டு செல்போனைப் பார்த்துக் கொண்டிருப்பதும் அதில் வரும் கிரிக்கெட் ஸ்கோரை கவனித்துக் கொண்டிருப்பது மாதிரி அலட்சியம் செய்து வேகமாகச் சாப்பிடாமல் மெதுவாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இதனால் கோபமடைந்த சங்கர் அவர்களை நேரடியாக எதுவும் பேச முடியாமல் பல்லைக் கடித்துக் கொண்டு நின்று கொண்டு இருந்தான்.
சீக்கிரம் சாப்பிட்டுட்டு எழுந்து செல்லுங்கள் என்று திட்டுவோமா என்று எதுவும் சொல்ல முடியாமல் கல்லாவில் அமர்ந்து கொண்டு செல்போன் பார்த்துக் கொண்டிருக்கும் நபர்களை திட்டலாமா? வேண்டாமா? என்று யோசனை இருந்தார் அந்த உணவு விடுதியின் முதலாளி :
இடுப்பில் கை வைத்துக் கொண்டு நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்த அமலாவைப் பார்த்த சங்கர் தன் அருகில் இருந்த வேறொரு சேரை எடுத்துப் பாேட கள் முட்டியை பிடித்து உஷ்.என்று அமர்ந்தால் அமலா.
அப்போதும் எதிர் திசையில் இருக்கும் அந்த வாடிக்கையாளர்கள் நமக்கு பின்னால் சாப்பிடுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள். அதுவும் நிறைமாதக் கர்ப்பிணி பெண் இருக்கிறாள் என்பதைச் சட்டை செய்யாமல் அதேபோல செல்போனில் கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பதும் இன்னொருவன் பாடல் கேட்பதுமாய் மிகவும் தாமதமாகவும் அலட்சியமாகவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.
இவர்களில் சாப்பிட்டு முடித்தால் தான் சங்கரும் அமலா அமர முடியும் என்ற நிர்பந்தத்தில் இருந்ததால் அவர்கள் உள்ளே போய் சாப்பிட முடியாமல் திணறினார்கள்
ஒரு கட்டத்தில் இந்த உணவு விடுதி வேண்டாம் அடுத்த இடத்திற்கு செல்லலாம் என்று எத்தனித்த போது பொறுத்துப் பார்த்து அந்த உணவு விடுதியின் முதலாளி வேகமாக சாப்பிடாமல் அவர்கள் சவுரியத்துக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த இருவரின் செல்போனைத் தட்டி விட்டார். இதெல்லாம் ஓட்டலா .? இல்ல உங்க வீடா சீக்கிரமா சாப்பிட்டு எந்திரிச்சு போக மாட்டீங்களா? உங்களுக்கு பின்னால எத்தனை பேரு வந்து கிட்டு இருக்காங்க. அதெல்லாம் மைண்ட்ல வைக்காம நீங்க செல்போன்ல படம் பார்த்துகிட்டு கிரிக்கெட் ஸ்கோர் பாத்துட்டு இருந்தா என்ன அர்த்தம்? சீக்கிரமா எழுந்திரிங்க ரஎன்று உக்கார வெயில் தணிந்த அந்த மாலை நேரத்திலும் விக்கிரமாக பேசினான் அந்த உணவு விடுதியின் முதலாளி.
அப்படி நடந்து கொண்டவர்கள் உடனடியாக சாப்பிட்ட இடத்தை காலி செய்தார்கள்.
இலை எடுத்த பிறகு மேசை சுத்தம் செய்யப்பட்டு சங்கர் அமலாவும் வந்தார்கள்.
சாரி சார். இது தப்பு நடந்து போச்சு. தினம் இந்த மாதிரி தான் ஒரு ஆம்லெட் புரோட்டா வாங்கி வச்சுக்கிட்டு இரண்டு மணி நேரத்துக்கு மேல இந்த எடத்த விட்டு எந்திரிக்க மாட்டேங்குறாங்க? எப்ப இத சொல்லுவோம்னு நினைச்சுட்டு இருந்தேன் .அதற்கான சந்தர்ப்பம் வரல .ஆனா உங்களுடைய மனைவி நிறைமாத கர்ப்பிணியா இருக்கிறத பார்த்தோம். அவர்களுக்கு கொஞ்சம் கூட இரக்கமில்ல . அது தான் எனக்கு கோவம் வந்து திட்டிட்டேன். இனிமே அவனுக இந்த மாதிரி அலட்சியம் பண்ணிட்டு சாப்பிட மாட்டாங்கன்னு நினைக்கிறேன். நீங்க சாப்பிடுங்க சார்” என்று சங்கருக்கும் அமலாவுக்கும் வழி விட்டார் உணவு விடுதியின் முதலாளி.
தங்கள் சாப்பிடுவதற்கு தேவையான உணவுகளை ஆர்டர் செய்தார் சங்கரும் அமலாவும் அந்த இரவு நேர உணவு விடுதியில் ஜருராக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.
தூரம் பார்த்தார் முதலாளி.
ஒருவன் செல்போனில் படம் பார்த்துக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. அவனை நோக்கி வேகமாக நடந்தார் .
நம்மிடம் தான் இவர் வருகிறார் என்று நினைத்த அந்த வாடிக்கையாளர் தன் செல்போனை வேகமாக அணைத்துவிட்டு சாப்பிட ஆரம்பித்தான்.
இனி எவனும் தப்பு செய்ய மாட்டான் என்று நம்பிக்கையில் கல்லாவை நோக்கி நடந்து கொண்டிருந்தார் அந்த முதலாளி.
சங்கரும் அமலாவும் நிம்மதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.