சிறுகதை

அறை நண்பர்கள்… | ராஜா செல்லமுத்து

“ராகவா”

“சொல்லு சந்தோஷ்”

“ஒண்ணுல்ல”

“இல்ல ஏதோ சொல்ல வந்த . ஆனா அத உள் நாக்குலயே ஒளிச்சிட்ட ”

“இல்ல”

“ஆமா”

“என்னத்த சொல்றது”

“நீ மனசில எதையோ வச்சிட்டு பேசிட்டு இருக்க”

“இல்ல ராகவா”

“ஆமா சந்தோஷ். என்னைய பத்தி நீ என்னமோ நெனைச்சிட்டு இருக்கய்ன்னு நெனைக்கிறேன்’’

“இல்லையே”

“ஆமா”

“உன் கூட ஒரே ரூம்ல இருந்தது என் தப்பு தான்’’

“உன் தப்பில்ல ராகவா. உன்ன நான் என் கூட சேத்தனே அது தான் தப்பு. வேலியில போன ஓணான வேட்டியில புடுச்சு போட்ட கதையா போச்சுய்யா; ஒன்ன சேத்தது என்றான் சந்தோஷ் . அவன் பேசும் பேச்சில் கோபம் இருந்தது.

இப்ப என்ன தப்பு கண்டு பிடிச்சிட்டேன்னு இப்பிடி துள்ளற. நீ என்ன செய்யல ஒழுங்கா வீட்டக்

கூட்டியிருக்கியா ? காமன் பாத்ரூம் தான .அத என்னைக்காவது ஒழுங்கா கழுவி விட்டிருக்கியா? ஒன்னோட உன்னோட இடத்த மட்டும் கரைக்டா சுத்தப்படுத்துற. ரூம ரொம்ப சரியா வச்சுக்கிற .ஆனா நாம பொதுவா வீட்டுக்கு ஒரு வேல கூட செய்ய மாட்டேன்கிற. இது ரொம்ப சுயநலம் ராகவன்.

அதெப்படி இருக்கிற வீட்டுல இவ்வளவு பாகுபாடு பாக்குற. ஆனா நான் மட்டும் அவ்வளவு வேலையையும் செய்யணும். இல்ல நீ ரொம்ப காரியக்காரன். நாங்க மட்டும் இளிச்சவாயன் இல்ல என்ற சந்தோஷின் கோபம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

அப்பவும் அவன் அறையே சுத்தம் செய்து கொண்டே இருந்தான். நான் இவ்வளவு சொல்றேன் அப்பவும் ஒன்னோட வேலைய மட்டும் தான் பாத்திட்டு இருக்க என்ற சந்தோஷ் ராகவன் பேசுவதை எதையும் சட்டை செய்யாமல் அவன் அறையைச் சுத்தம் செய்து கொண்டே இருந்தான்.

ச்சே இருக்கிறது ஒரே வீடு. உன்னோட ரூம் . நீ இருக்கிற எடத்த மட்டும் சரியா சுத்தம் செய்ற. ஆனா பொதுவா இருக்கிற எடத்த எதுவும் செய்ய மாட்டேன்கிற. இதுல இந்த வீட்ட எடுத்தது நான். அட் வான்ஸ் குடுத்தது நான். ஆனா வசதியா வந்து ஒக்காந்திட்டு என் தலையிலயே ஏறி மொளகா அறைக்கிற. நேரம்டா. நீ மட்டுமில்ல இந்த ஒலகத்தில இருக்கிற எல்லா சுயநலவாதிகளுமே அப்பிடித்தான் . அவனவன் வேலைய சுய நலத்தோட தான் செஞ்சுக்கிருவானுகளேயொழிய தவறியும் பொது வேலைய கொஞ்சம் பொது நலத்தோட செய்ய மாட்டானுக. இதுல நீ மட்டுமென்ன விதிவிலக்கா?

ஒன்ன மாதிரி ஆளுகெல்லாம் இப்பிடித் தாண்டா இருப்பீங்க . சரிசரி உன் கூட தொடர்ந்து குப்ப கொட்ட முடியாது போல. நீ வீட்டக்காலி பண்ணு என்றதும்

ராகவா ஏன் இப்படி? நாம என்ன அப்படியா பழகியிருக்கோம். இனிமே எல்லாத்தையும் பாத்துக்கிறேன்.

நானே கூட்டுறேன் ;நானே கழுவுறேன்; நானே எல்லாத்தையும் செய்றேன் என்று காலில் விழாத குறையாகச் சொன்னான் ராகவன்.

இல்ல அது சரிப்பட்டு வராது. இதையே நீ நெறைய தடவ சொல்லிட்ட ;ஒரு நாள் ரெண்டு நாள் செய்வ. திரும்பவும் அதையே தான் மறுபடியும் செய்யப் போற .நல்லது கெட்டது சரி தவறுங்கிறது அவனவன் புத்தியில மொதல்லயே எறணும். அத விட்டுட்டு நாம சொல்லித்தான் அது வரணும்னா அது பெரிய தப்பு. அவன் மனுசனே இல்ல இதெல்லாம் ரத்தத்திலயே ஊறிக் கெடக்கணும்.எதுவும் சொல்லி வரக்கூடாது; ராகவன் உன்னையே மாதிரி அடுத்தவங்கள நினைச்சு பாரு. உனக்கு எப்படி எது சரின்னு தெரியுதோ அது தான அடுத்தவனுக்கும் இருக்கும் .நீ திருந்தவே மாட்டா என்று ராகவனைத் திட்டிக் கொண்டிருந்தான் சந்தோஷ்.

அப்போது அவனுக்குப் புத்தி வந்தது போல அவரசமாக பொது அறையை வேகமாகக் கூட்டிக் கொண்டிருந்தான் ராகவன். அவன் அப்படிச் செய்வது ராகவனுக்கு உண்மையாகவே தெரியவில்லை.

அவனவன் அளவில் அவனவன் செய்வது எல்லோம் சரியே சரியல்ல …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *