சினிமா

‘அரை நிர்வாண’ போசில் அதிர்ச்சியூட்டும் அமலாபால்

‘ஆடை’ – இது படத்தின் டைட்டில். இதில் நடிக்க அதீத உடல் பலமும், மன பலமும் வேண்டும். அதனை புரிந்துக்கொண்டு நடிக்க முன் வந்தார் நடிகை அமலா பால். இன்றைய தலைமுறையை இலவச அலைபேசி தரவுகள், (மொபைல் டேட்டா), அலைபேசி தகவல்கள் சீரழித்து வருகிறது. இதனை சுட்டிக்காட்டி தோலுரிக்கும் கேளிக்கை படம் இந்த ஆடை என்று சொன்னார் இயக்குனர் ரத்னகுமார்.

‘மேயாத மான்’ படத்தை இயக்கியவர் ரத்ன குமார்.

உணர்ச்சிகரமான கதை களத்தை கொண்ட இந்த படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை நழுவ விடக்கூடாது என்பதினாலேயே அமலா பால் மற்ற பல படங்களை தவிர்த்து இந்த படத்தை ஒப்புக்கொண்டுள்ளாராம்.

பொதுவாகவே இது மாதிரியான, கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை பீமேல் ஓரியன்ட் , பெண்கள் முன்னேற்றத்திற்க்கான படம் அல்லது சூப்பர் நாச்சுரல் ஹாரர் சினிமா என்று தான் சொல்வார்கள் . ஆனால் இந்த படம் மேற் சொன்ன எந்த வகையிலும் சாராத அந்த முன் கணிப்புகளை உடைத்தெறியும் உணர்ச்சிகரமான பரபரப்பான கதையின் திரை வடிவம் “என்று கூறினார், இயக்குனர்.

“ஆடை” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மற்ற கதா பாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. V-ஸ்டுடியோஸ் விஜி சுப்ரமணியன் தயாரிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *