நல்வாழ்வுச் சிந்தனைகள்
குறைந்த அளவில் நீரை குடிப்பதாலும் அதிகம் உப்புத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவதாலும் சிலருக்கு சிறுநீரகங்களில் உப்புகள் அதிகம் சேர்ந்து கற்கள் உருவாகும் நிலை உண்டாகின்றது.
அரைக்கீரையை தினசரி உணவில் சிறிதளவேனும் எடுத்து வருபவர்களுக்கு சிறுநீரகத்தில் கற்கள் எதுவும் இருப்பின் நாளடைவில் கரைந்துவிடும்.
அரைக்கீரை சிறுநீரை நன்கு பெருக்கும் திறன் கொண்டது. எனவே இது உடலில் சேர்ந்திருக்கக் கூடிய நச்சுக்களை அனைத்தையும் சிறுநீர் வழியாக வெளியேற்றிவிடும் ஆற்றல் கொண்டது. எனவே அரைக்கீரை சாப்பிடுங்கள்;உடல் நலம் காத்திடுங்கள்.
––––