செய்திகள்

அருப்புக்கோட்டை அருகே 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 3 பேர் பலி

Makkal Kural Official

அருப்புக்கோட்டை, ஜூலை 10–

அருப்புக்கோட்டை அருகே இன்று 2 லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் உள்பட 3 பேர் பலியானார்கள்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் மதுரை –- தூத்துக்குடி 4 வழிச்சாலையில் கண்டெய்னர் லாரியும் சரக்கு லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரு வாகனங்களின் டிரைவர்கள் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய மூவரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் பொக்லைன் மூலம் சேதமடைந்த வாகனங்களை அப்புறப்படுத்தினர். விபத்து குறித்து அருப்புக்கோட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *