செய்திகள்

அருணாசல பிரதேசத்தில் 3.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

இடாநகர், ஜூன் 11–

அருணாசல பிரதேசத்தில் உள்ள மேற்கு காமெங்கில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.

அருணாச்சல பிரதேசத்தின் மேற்கு காமெங்கில் இன்று அதிகாலை 4.53 மணியளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 -ஆகப் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் மலைப் பகுதியில் மண் சரிவும், வீடுகளில் விரிசலும் ஏற்பட்டுள்ளன. ஆனால் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்த முழுமையான தகவல் இன்னும் வெளியாகவில்லை என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *