செய்திகள்

அரியானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து

Makkal Kural Official

சண்டிகார், ஜூலை 2–

அரியானாவில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

அரியானா மாநிலம் அம்பாலாவில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரெயிலானது இன்று அதிகாலை 4 மணி அளவில் கர்னல் மாவட்டத்தில் உள்ள தாரோரி பகுதிக்கு அருகே சென்ற போது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரெயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்தது.

இது குறித்து தகவல் அறிந்த ரெயில்வே அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து டெல்லி–அம்பாலா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்தை நிறுத்தினர்.

இதனைதொடர்ந்து, தண்டவாளத்தில் கவிழந்த பெட்டிகளை மீட்கும் பணியில் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். இந்த ரெயில் விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. ஆனால் பெட்டிகள் தண்டவாளத்தில் கவிழ்ந்ததால் அம்பாலா–டெல்லி ரெயில் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *