செய்திகள்

அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்குசித்தா மருந்து அளிக்க அனுமதி

Spread the love

சென்னை, மே.21-

அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு சித்தா மருந்து அளிக்க இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி அனுமதி அளித்துள்ளது.

சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் உள்ள கொரோனா நலவாழ்வு மையத்தில் தங்கி இருக்கும் கொரோனா நோயாளிகளுக்கு அலோபதி மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். அங்குள்ள கொரோனா நோயாளிகளுக்கு சித்தா மருந்துகளையும் ஒருங்கிணைந்து அளிக்க கொரோனா தடுப்பு சென்னை மண்டல சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் பரிந்துரைத்தார். அதன்படி சித்தா டாக்டர் கே.வீரபாபு அலோபதி மருத்துவ குழுவினருடன் ஒருங்கிணைந்து சிறப்பு மூலிகை தேனீர் உள்ளிட்ட சித்த மருத்துவ சிகிச்சைகளை அளித்து வந்தார். இதன் மூலம் கொரோனா நோயாளிகள் விரைவில் குணம் அடைந்து வீடு திரும்பினர்.

இந்த நிலையில், சித்தா டாக்டர் கே.வீரபாபு அலோபதி டாக்டர்களுடன் இணைந்து அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க இந்திய மருத்துவ மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் எஸ்.கணேசன் அதிகாரப்பூர்வ அனுமதி அளித்து உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *