பெங்களூரு, மே 13–
தவறான அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு கொடுத்த அடி இது அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் 134 தொகுதிகளில் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த நிலையில், காங்கிரஸ் வெற்றி குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது;
தவறான அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு கொடுத்த அடி இது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பல்வேறு மாநில முதலமைச்சர்கள் திரண்டு இங்கே வந்து தங்களின் பலத்தை காட்டினர். ஆனால் மக்கள் பாரதீய ஜனதாவை தூக்கி எறிந்துவிட்டனர்.
கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதை கட்சி மேலிட பொறுப்பாளர்கள் பெங்களூருவுக்கு வருகை தந்து தேர்வு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.