சினிமா

அம்ரீஷ் இசையில் ‘சின்னமச்சான், செவத்தமச்சான்’: பிரபுதேவா, நிக்கிகல்ராணி டான்ஸ் டாப் – டக்கர் – தூள்!

முழுநீள நகைச்சுவைப் படம் என்று விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள் டி.சிவாவும் (தயாரிப்பாளர்), ஷக்தி சிதம்பரமும் (இயக்குனர்) படம்: ‘சார்லி சாப்ளின் 2’. 16 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான ‘சார்லி சாப்ளின்’ படத்தின் பாகம் 2 இது.

பிரபுதேவா நாயகன். நிக்கிகல்ராணி நாயகி. ஆதாசர்மா 2ம் நாயகி. பிரபு, டி.சிவா, விவேக் பிரசன்னா, ரவி மரியா உள்பட முகம் தெரிந்தவர்கள் 20 பேர்.

மேட்ரிமோனியல் டாட் காம் நிறுவனம் நடத்தும் இளைஞன் பிரபுதேவா. 99 கல்யாணங்களை வெற்றிகரமாக நடத்தியவன். 100வது அவனது கல்யாணம். அவனுக்கும் நிக்கிகல்ராணி ஆதாசர்மா சந்திப்பில் ஏற்படும் குழப்பமே முழுநீள நகைச்சுவையாக மாறி இருக்கிறது.

ஆங்காங்கே திரைக்கதையில் காதல் ஜோடிக்கு சிக்கல் சோதனைகள் விழி பிதுங்க வைக்கும் சம்பவங்கள். ஒவ்வொன்றையும் எப்படி நாயகன் பிரபுதேவாவும், அவனது நண்பன் விவேக் பிரசன்னா கூட்டணியும் சமாளித்து திருமணத்தில் முடிக்கிறார்கள் என்பதே கதை.

சென்னை, துபாய், தடா காடு, ஆந்திரா, திருப்பதி என்று காட்சிகள் நகர்கிறது.

செல்லதங்கையா எழுதிய பாடல் ‘சின்னமச்சான், ஏய், சின்னமச்சான்’ செந்தில்கணேஷ், ராஜலட்சுமி ஜோடி பாடிய பாடல். ‘யூ ட்யூப்பில்’ லட்சக்கணக்கான நேயர்களைக் கவர்ந்த அட்டகாசமான வரவேற்பைப் பெற்ற பாடல். அம்ரீஷ் இசையில் உருவான பாடலை ‘புத்திசாலித்தனத்தோடு’ (கமர்ஷியல் ஹிட்) படத்தில் சேர்த்திருக்கிறார்கள் டி.சிவாவும், ஷக்தி சிதம்பரமும்.

கிராமீய மணம் வீசும் பாடலில் பிரபுதேவா நிக்கிகல்ராணி ஆட்டம் எப்படா வரும் என்று ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, திரையில் பார்த்ததும் மகிழ்ச்சியில் திளைக்கிறோம், டாப் டக்கர் தூள் பிரபுதேவாவின் ஆட்டமும், நிக்கிகல்ராணியின் ஊஞ்சலாடும் இளமையும் சௌந்தர்ராஜனின் காமிரா, ஜானி, ஸ்ரீதர் உழைப்பில் டான்ஸ் மூவ்மெண்ட்ஸ் சூப்பர். அம்ரீஷ் அசத்தியிருக்கிறார், ஃபோக் இசையில்.

‘ஸ்லாப் ஸ்டிக் காமெடி’ ரகம் ‘சார்லி சாப்ளின் 2’. ஏன் சிரிக்கிறோம், எதற்கு சிரிக்கிறோம் என்று கேள்வி நோ…நோ… கூடாது. சிரிக்கணும், அது தான் பிரபுதேவா, டி.சிவா, ஷக்தி சிதம்பரம் எதிர்பார்த்தது.

‘வீட்டில் வெட்டியாக இருந்தும் பொழுதே போகலையே…’ என்று அலுத்துக் கொள்கிறீர்களா? அசாத்ய பொறுமைசாலிகளா நீங்கள்? ‘அப்படியென்றால் சார்லி சாப்ளின் 2 உங்களுக்காகவே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *