போஸ்டர் செய்தி

அம்பேத்கர் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை

சென்னை, ஏப். 14–
டாக்டர் அம்பேத்கரின் 129-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது திருவுருவச் சிலைக்கு அண்ணா தி.மு.க. சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அம்பேத்கரின் 129-வது பிறந்த நாளான இன்று காஞ்சிபுரம், பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு, அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் தலைமையில், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான டாக்டர் வைகைச்செல்வன், கழக அமைப்புச் செயலாளர் வி. சோமசுந்தரம், காஞ்சிபுரம் மேற்கு மாவட்டச் செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன், காஞ்சிபுரம் மத்திய மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும், காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான மரகதம் குமரவேல் எம்.பி. உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மேலும், சென்னை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருஉருவச் சிலைக்கு, கழக அமைப்புச் செயலாளரும், அமைச்சருமான டி. ஜெயக்குமார், கழக அமைப்புச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளருமான எஸ். கோகுல இந்திரா, வட சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் நா. பாலகங்கா, ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் கே.எஸ். சீனிவாசன், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதி பா.ம.க. வேட்பாளர் சாம் பால், சென்னை வடக்கு நாடாளுமன்றத் தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகாபுரம் ஆர். மோகன்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதேபோல், ஆங்காங்கே அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் திருஉருவச் சிலைகளுக்கு, கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில், அம்மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சிகளில், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகம், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப் பிரிவு, வர்த்தக அணி மற்றும் கலைப் பிரிவு உட்பட கழகத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *