செய்திகள்

அம்பேத்கரின் 132வது பிறந்த நாள்: ஸ்டாலின் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

சென்னை, ஏப்.14–

அம்பேத்கரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின் சமத்துவ நாளுக்கான உறுதிமொழியை இன்று ஏற்றுக் கொண்டார்.

நாடு முழுவதும் அம்பேத்கரின் 132வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. அவரின் பிறந்த நாள் சமத்துவ நாளாகக் கொண்டாடப்படும் என்று நேற்று தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இந்த நிலையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுவப்படத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘சமத்துவ நாள்’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள், மாநகராட்சி மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர், வாரியத் தலைவர்கள், தலைமைச் செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், மணிமண்டபத்தில் நிறுவுவதற்காக அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.