சென்னை, ஜூன் 30–-
அமைச்சரை நீக்க கவர்னருக்கு அதிகாரம் இல்லை. இதனை நாங்கள் சட்ட ரீதியாக சந்திப்போம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தென்சென்னை மாவட்ட தி.மு.க. சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, ‘முத்தமிழ் அறிஞரை போற்றும் தித்திக்கும் இசையரங்கம்’ எனும் தலைப்பில் சிறப்பு இசை நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் நேற்று மாலை நடந்தது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சி முடிந்து அவர் செல்லும்போது, செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து கவர்னர் ஆர்.என்.ரவி ‘டிஸ்மிஸ்’ செய்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தபோது, “அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்குவதற்கு கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அதிகாரம் கிடையாது. இதனை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம்”, என்றார்.