நாடும் நடப்பும்

அமேசான் மழைக் காடுகளின் பாதுகாப்பு; மீண்டும் அதிபராக வந்து விட்ட லூலாவிடம் மக்கள் எதிர்பார்ப்பு


ஆர். முத்துக்குமார்


‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் இருக்கும் முக்கிய அங்கத்து நாடான பிரேசிலில் நடந்து முடிந்த தேர்தலில் 39வது அதிபராக லுயிஸ் இனாசியோ நூலா மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளார்.

நூலா என்று அழைக்கப்படும் அவர் தான் பல்வேறு ஊழல் புகார்களுக்கிடையே தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

மீண்டும் லூலா ஆட்சியைப் பிடிக்க முடிந்தது எப்படி? குறிப்பாக 3 ஆண்டுகள் சிறை அடைக்கப்பட்ட பிறகு மக்கள் அவர் மீது நம்பிக்கை வைக்க காரணம் என்ன? இது அவர்கள் நாட்டு அரசியல் என்பதை தாண்டி நம்மால் அவரது வருகை நல்ல செய்தியாகவே புரிந்து கொள்ள முடியாத புதிராக இருக்கும்.

பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தில் நிலைத் தன்மை கொண்டு வந்திருந்தாலும் லூலாவின் அரசியல் வாழ்க்கையைக் கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்தது ஓர் ஊழல் குற்றச்சாட்டு. ‘ஆப்பரேஷன் கார் வாஷ்’. பிரேசிலின் அரசுத் துறை பெட்ரோலிய எண்ணெய் நிறுவனமான பெட்ரோபிராஸில் நடந்த ஊழலில் லூலா நேரடியாக குற்றம் சாட்டப்பட்டார். லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய ஊழல் என்று வர்ணிக்கப்பட்ட இந்த வழக்கின், லூலாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் பத்திரிகையாளர் கிளென் கரீன்வால்டு வெளியிட்ட ஆவணங்களின் அடிப்படையில் உச்ச நீதிமன்றம் லூலா மீதான குற்றச்சாட்டை ரத்து செய்தது. 2021 நவம்பர் 8 அன்று லூலா விடுவிக்கப்பட்டார்.

மேலும் சர்வதேச அரங்கில் லூலாவின் வருகை பல எதிர்பார்ப்புகளைத் தருகிறது.

இவரது உறுதிகளில் ஒன்று அமேசான் மழைக்காடுகளில் பாதுகாப்பு திட்டம்.

உலகின் மிகப்பெரிய பசுமைப் போர்வையான அமேசான் மழைக் காடுகளில் மரங்கள் அழிக்கப்படுவது வாடிக்கையாகி விட்டது.

பாரீஸ் ஒப்பந்தம் தந்துள்ள வரையறைகளை முழுமையாக அமுல்படுத்த அமேசான் காடுகள் பாதுகாக்கப்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

அமெரிக்கா உட்பட பல நாடுகள் பாரீஸ் ஒப்பந்தத்தை விட்டு விலகிட முக்கிய காரணம் பசுமைப் போர்வையை அதிகரிக்க பெரிய முதலீடுகள் செய்தாக வேண்டும் என்பதற்காகவே பயந்து ஒப்பந்தத்திலிருந்து நழுவிக் கொண்டது.

ஆனால் இருக்கும் பசுமைமயத்தை காப்பதற்கும் தயங்கினால் எப்படி? ஆகவே ஓரளவு பொதுநல நோக்கத்துடன் தயாரிப்பு தொழில் கூடங்களில் கரும்புகை கட்டுப்பாடுகளுக்கு முதலீடுகள் செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் அமேசான் காடுகள் தீயிலும் மரம் வெட்டி உபயோகிப்பதற்கும் தடை விதிக்க குரல் கொடுத்து வருகிறார்கள்.

ஆகவே உலக நாடுகள் லூலாவின் வருகைக்கு பிறகு அமேசான் காடுகளுக்கு ஏற்பட்டு வரும் நாசத்தை தடுப்பார் என்று நம்புகிறது. அவரது திட்டங்களுக்கு காத்தும் இருக்கிறது.

லூலா தன் முந்தைய ஆட்சிக் காலத்தில் செயல்படுத்திய நலத்திட்டங்கள் இன்று காணாமல் போய் விட்டன. பிரேசிலின் முக்கிய வர்த்தகக் கூட்டாளியான சீனா, அதன் பொருளாதாரம் இன்று இருக்கும் நிலையில் பிரேசிலுக்குக் கைகொடுக்கும் என்று சொல்வதற்கு இல்லை.

உலகின் அதிக கொரோனா இறப்பு பட்டியலில் 2வது இடத்தில் பிரேசில் இருக்கிறது, முதல் இடத்தில் அமெரிக்கா!

இந்தியாவின் நெருக்கம் பிரேசிலுக்கு மிக அவசியம் என்பதை உணர்ந்து பொருளாதார மீட்சிக்கு நமது உறவுகளை விரும்பி ஏற்கத் தயாராகவே இருப்பார்கள்.

நமது சர்வதேச உறவுகள் கொள்கையில் பிரேசில் மிக முக்கிய பங்கு இருக்கப் போகிறது. குறிப்பாக ரெயில் மற்றும் விமான துறைகளில் அவர்களுடன் இணைந்து செயல்பட்டால் நமக்கும் நல்லது தான்.

பிரேசிலுக்கும் நமது கனரக தயாரிப்புகள், ஐடி துறை வசதிகள், ஆடை ஆபரணங்கள் மற்றும் மருந்து மாத்திரைகள் தேவைப்படுகிறது.

இதுவரை சீனா அந்நாட்டில் வைத்திருந்த ஆதிக்கத்தை தொடர முடியாமல் திணறும் நிலையில் இத்துறைகளில் வர்த்தகத்தை உயர்த்திக்கொண்டால் நமக்கும் ஆதாயம் இருக்கிறது.

ஆக மிக வேகமாக வளரும் பொருளாதாரங்களாக கருதப்படும் பிரேசிலும் இந்தியாவும் இணைந்து செயல்பட்டால் இரு நாட்டு பொருளாதாரமும் வளம் பெற்று முன்னணி பொருளாதாரமாக வெற்றி நடை போட வாய்ப்புகளை கொண்டு வருகிறார் லூலா.

அதிபராக அதிகாரத்தைக் கைப்பற்றி விட்டாலும் நாடாளுமன்றத்தில் வலதுசாரிகள் பெரும்பான்மை வகிப்பது லூலாவுக்கு பெரும் நெருக்கடியாக அமையும்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *