கோவை, பிப்.7–
அமேசான் பயர் டிவி சந்தா மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் வீடுகளின் பாதுகாப்பு மற்றும் வசதியிலிருந்து அனைத்து மொழிகளிலும் சமீபத்திய திரைப்படங்களைப் பார்த்து மகிழ்ந்தனர். பிரைம் வீடியோவில் அதிகம் பார்க்கப்பட்டது. இந்தியில் ஷெர்ஷா ஷெர்னி, சர்தார் உதாம் ஆகும். தமிழில் ஜெய் பீம், சர்ப்பட்ட பரம்பரை, மாஸ்டர் அதிகம் ஒளிபரப்பானது.
மலையாளத்தில் த்ரிஷ்யம் 2, கோல்ட் கேஸ், மாலிக் மற்றும் தெலுங்கில் த்ருஷ்யம் 2, டக் ஜெகதீஷ், நாரப்பா. கன்னடம் – ரத்னன் பிரபஞ்சா, யுவரத்னா, ராபர்ட். பேமிலி மேன் சீசன் 2 இந்தியாவில் அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சியாகவும், தி வீல் ஆப் டைம் பயர் டிவி சாதனங்களில் பிரைம் வீடியோவில் அதிகம் ரசிக்கப்பட்ட சர்வதேச நிகழ்ச்சியாகவும் இருந்தது.
இந்தியா முழுவதும் பயர் டிவி சாதனங்களை வாடிக்கையாளர்கள் வாங்கியுள்ளனர். ஹிசார், திருவள்ளூர், சித்தூர், ஆல்வார், இம்பால் மற்றும் தெற்கு அந்தமான் போன்ற சிறிய நகரங்களில் பயர் டிவி சாதனங்களின் விற்பனை அதிகரித்தது.
ஒவ்வொரு 4 வாடிக்கையாளர்களில் ஒருவர் ஃபயர் டிவி சாதனங்களின் புதிய, வேகமான பதிப்பிற்குச் சேர்க்கப்பட்டு அல்லது மேம்படுத்தப்பட்டுள்ளனர். ப்ரைம் டே மற்றும் அமேசான் கிரேட் இந்திய திருவிழாவில் பல அரிய திரைப்படங்கள் இடம் பெற்றது. இதன் வாடிக்கையாளர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு பயர் டிவி சாதனங்களை பரிசளித்துள்ளனர்.