செய்திகள் வர்த்தகம்

அமேசான் டெலிவரி ஆட்களுக்கு நிவாரணத் தொகை

கோவை, மே.25–

அமேசான் இந்தியா தனது ஊழியர்கள் மற்றும் முன்களக் குழுக்களின் பாதுகாப்புக்கு கொரோனா நிவாரணத் திட்டத்தை (சிஆர்எஸ்) அறிமுகப்படுத்தி உள்ளது.

அமேசான் இந்தியா பணியாளர் முகமை மூலம் பணியமர்த்தப்பட்ட முன்களக் குழுக்கள், கூட்டாளிகள் மற்றும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு கொரோனா படித் தொகையையும் மருத்துவச் செலவுகளையும் ஈடு செய்யத் தேவையான கூடு நிதி உதவிகளையும் வழங்கும்.

படித்தொகை

ஒவ்வொரு ஊழியருக்கும் வீட்டிலேயே எடுத்துக் கொள்ளும் கொரோனா சிகிச்சை, மருத்துவக் கருவிகள் அல்லது மருந்துவம் தொடர்பான செலவுகளுக்கு கொரோனா படித் தொகையாக ரூ.30 ஆயிரத்து 600 ஒரேயொரு முறை மட்டுமே அளிக்கப்படும். ஊழியர்களின் கொரோனா தொடர்பான மருத்துவமனைச் செலவுகள் அதிகபட்ச காப்பீட்டுத் தொகையைத் தாண்டும் பட்சத்தில், அமேசான் இந்தியா ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் வரையிலான காப்பீடு அங்கீகாரம் பெற்ற மருத்துவச் செலவுகளைக் கூடுதலாக ஈடு செய்யும்.

அரசு அறிவித்துள்ள கட்டுப்பாட்டு மண்டலங்களில் வசிக்கும் முன்களக் கூட்டாளிகள் உள்ளூர் கட்டுப்பாடுகள் காரணமாக வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், அவர்களுக்கு வாழ்வாதாரத் தொகையாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்கப்படும்.

கொரோனா களப்போர் குழு

மேலும் தொலைபேசி மற்றும் ஆன்லைன் வழியாக மருத்துவ ஆலோசனைகளையும் தீர்வுகளையும் இக்குழுக்கள் பெறலாம். இது கட்டணச் சேவையாகவும் இலவச ஆலோசனைச் சேவையாகவும் ஊழியர் உதவித் திட்டம் மூலம் வழங்கப்படும்.

அமேசானில் உள்ள அனைத்து முன்களக் குழுக்களின் கொரோனா தொடர்பான அவசரத் தேவைகளை உடனடியாக நிறைவு செய்யக் கொரோனா களப்போர் குழுக்களும் இயங்கி வருகின்றன. கொரோனா தொற்றிலிருந்து முழுமையாகக் குணம் அடைந்த ஊழியர்களுள், பிளாஸ்மா தானம் தர முன்வரும் கொடையாளிகளுடன், ஊழியர்கள் மற்றும் கூட்டாளிகளை இணைக்கத் தன்னார்வு முனைவும் உண்டு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *