செய்திகள்

அமெரிக்க பொறியாளர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை; ரூ. 85 லட்சம் ரொக்கம் பறிமுதல்

கன்னியாகுமரி, மார்ச் 29–

நாகர்கோவிலில் அமெரிக்க பொறியாளர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தியதில் ரூ.85 லட்சம் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாவட்ட கல்வி அலுவலகம் எதிரே, ஜெகநாதன் தெருவில் அமெரிக்காவை சேர்ந்த பொறியாளர் ராஜேஷ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. அண்மையில் இவரது மகளுக்கு பிரமாண்டமான முறையில் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.

ரூ.85 லட்சம் பறிமுதல்

பொறியாளர் ராஜேஷ் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலின் பேரில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை அவரது வீட்டினுள் சென்று தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சோதனையின்போது கணக்கில் வராத 85 லட்சம் ரூபாய் பணம் சிக்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து இந்த வீட்டில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *