நியூயார்க், ஜூலை 2–
அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் வங்கியாளருமான ஜோனாதனன் கேய், அமெரிக்க பெண் ஒருவரை தாக்கிய வீடியோ வைரலான நிலையில், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலிசில் சரணடைந்தார்.
அமெரிக்காவின் புரூக்ளினில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற சுயமரியாதைப் பேரணியில் பெண் ஒருவர் தாக்கப்பட்டார். ஜூன் 8 ந்தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் பெண்ணை அவரது முகத்தில் குத்துவிடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
வங்கி இயக்குநர் சரண்
பொதுவெளியில் ஒரு பெண்ணை தாக்கியது யார்..? இது சட்டப்படி குற்றம் எனக்கூறி பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்டது மோலீஸ் அண்ட் கோ வங்கியில் முதலீட்டு இயக்குநராக பணியில் உள்ள ஜோனாதனன் கேய் என்பது கண்டறியப்பட்டது.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபர் மீது 38 வயதான பெண் ஒருவர் நியூயார்க் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதில் தனது மூக்கு உடைக்கப்பட்டு தனது கண்கள் வீக்கம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். பெண்ணின் மீது தாக்குதல் நடத்திய வீடியோ வைரலான நிலையில் ஜோனாதனன் கேய் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார்.
இவர் நியூயார்க் காவல்துறையில் சரணடையும்போது யாருக்கும் தெரியாத வகையில் இருக்க காவல்துறை அலுவலகத்தின் 78 வது வளாகத்தில் வரும்போது முகமூடியுடன் கூடிய பழுப்பு நிற ஜாக்கெட் மற்றும் பேண்ட்டை அணிந்து கொண்டு வந்ததாக நியூயார்க் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.