செய்திகள்

அமெரிக்க காற்றாலைகளுக்கு பிரமாண்ட சக்கரங்கள்: வீல்ஸ் இந்தியா ஏற்றுமதிக்கு திட்டம்

அமெரிக்க காற்றாலைகளுக்கு பிரமாண்ட சக்கரங்கள்:

வீல்ஸ் இந்தியா ஏற்றுமதிக்கு திட்டம்

சேர்மன் எஸ். ராம் தகவல்

சென்னை, ஆக.1–

வீல்ஸ் இந்தியா, வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு சக்கரங்கள் தயாரிக்கிறது. கொரோனா ஊரடங்கால் வாகன உற்பத்தி பாதிக்கப்பட்டது. ஆனால் அமெரிக்க காற்றாலை நிறுவனங்களுக்கு தேவையான பிரமாண்ட அலுமினிய சக்கரங்களை உற்பத்தி செய்து, செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதியை துவக்கும். இந்திய ரெயில்வேக்கு ரெயில் பெட்டி தயாரிப்பில் முக்கிய பாகங்களையும் வீல்ஸ் இந்தியா சப்ளை செய்யும். விவசாயத்துறை நல்ல அறுவடை கண்டுள்ளது. இதனால் டிராக்டர் தேவை கூடியுள்ளதால் டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சக்கரங்களை தொடர்ந்து வீல்ஸ் இந்தியா சப்ளை செய்யும் என்று சேர்மன் எஸ்.ராம் தெரிவித்தார்.

சிறு கார்களுக்கு இனி தேவை இருக்கும். மத்திய அரசு அடிப்படை கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்தால் கட்டுமான புல்டோசர், கிரேன் போன்றவைகளுக்கு சக்கரங்களை வீல்ஸ் இந்தியா சப்ளை செய்ய முடியும்.

இதன் கேஸ்ட் அலுமினியம் ஆலை செப்டம்பர் மாதம் உற்பத்தி துவக்கும். இந்த ஆண்டில் முதல் 45 நாள் தொழிற்சாலை செயல்படவில்லை. தற்போது உற்பத்தி 45% அளவில் உள்ளது என்றும் நிர்வாக இயக்குனர் ஸ்ரீவத்ஸ் ராம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *