செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை

நியூயார்க், செப். 13–

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கும் ஜோகோவிச் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டி நடந்தன. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.30 மணிக்கு நடந்த இறுதிப்போட்டியில் ரஷ்யாவின் டேனில் மெட்வடேவ் மற்றும் செர்பியா நாட்டு வீரர் நோவக் ஜோகோவிச் ஆகியோர் மோதினர்.

இந்த போட்டியில் தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய மெட்வடேவ், நட்சத்திர வீரர் ஜோகோவிச்-க்கு பெரும் சவல் அளித்தார். 6–-4, 6-–4, 6–-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று ஜோகோவிச்சை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இதனால், கடந்த 2005ஆம் ஆண்டுக்கு பின்பு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற ரஷ்யர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

தற்போது 2021 அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 34 வயதான ஜோகோவிச்சை வீழ்த்திய மெத்வதேவ், கடந்த ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸின் இறுதி ஆட்டத்தில் ஜோக்கோவிச்சுடன் விளையாடி வீழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கும் ஜோகோவிச் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். தற்போது 21ஆவது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றுவார் என காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்த ஆண்டில் 4 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று சுமார் 52 ஆண்டுகளுக்குப் பிறகு சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதுவும் நிறைவேறாமல் போனது. ஜோகோவிச் இதுவரை 3 முறை அமெரிக்க ஓபன் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *