செய்திகள்

அமெரிக்க, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளில் உயர் கல்விக்கு ‘ஐடிபி’ நிறுவன ஆன்லைன் கண்காட்சி

சென்னைஆக. 8–

சர்வதேச கல்வி சேவை, ஐடிபி கல்வி நிறுவனம் மிகப்பெரிய ஆன்லைன் கல்வி கண்காட்சியை எட்டு வாரங்களுக்கு நாளை மறு நாள் (10ந் தேதி) முதல் அக்டோபர் 10ந் தேதி வரை நடத்துகிறது. இந்திய மாணவர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் அவர்களின் வெளிநாட்டு கல்வித் திட்டத்திற்கு உதவுவதற்கும், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, யு.எஸ் கனடா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருந்து 150 க்கும் மேற்பட்ட உயர் தர கல்வி நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

மாணவர்களின் வெளிநாட்டு கல்வியில் உள்ள சிரமங்களை தீர்ப்பதற்கும், அவர்களின் வீட்டிலிருந்தபடியே தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனத்துடன் நேரலையில் தொடர்பு கொண்டு பேசும் வகையில் முதன்முறையாக ஐடிபி கல்வி நிறுவனம் மிகப்பெரிய மெய்நிகர் கல்வி கண்காட்சியை நடத்துகிறது என்று ஐடிபிகல்விநிறுவனத்தின்தெற்காசியமண்டலஇயக்குநர்பியூஷ்குமார் தெரிவித்தார்.

ஐடிபி கல்வி நிறுவனம் இந்திய மாணவர்களுக்கு, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, யு.எஸ். கனடா, நியூசிலாந்து மற்றும் அயர்லாந்தில் சரியான பாடநெறி மற்றும் கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்ய சரியான ஆலோசனைகளையும் உயர்தர உதவிகளையும் வழங்குகிறது. இந்த ஆறு நாடுகளிலும் 700–க்கும் மேற்பட்ட உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவன பங்காளர்களை ஐடிபி கொண்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான பாடத்திட்டத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேர்வை மாணவர்களுக்கு வழங்குவதில் சிறந்து விளங்குகிறது.

வெளிநாட்டில் உயர்கல்விக்குச் செல்வது அதிக செலவாகும் என்பதை ஐடிபி உணர்ந்துள்ளது, எனவே மாணவர்கள் ஆரம்பத்திலேயே சரியான முடிவை எடுப்பது முக்கியம் என்று கருதுகிறது. ஆகையால், மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மதிப்புமிக்க தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவும், துறை வல்லுநர்களிடமிருந்து முறையான வழிகாட்டுதலைப் பெறவும் அனைத்தையும் உள்ளடக்கிய தளத்தை இது வழங்குகிறது.

மேலும் விவரங்களுக்கு www.idp.com/india என்ற வலைதளத்தை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *