செய்திகள்

அமெரிக்க அங்கீகரிக்கப்பட்ட 80 பல்கலைக்கழகம், கல்லூரிகளில் மேற்படிப்பைத் தொடர விருப்பமா?

Makkal Kural Official

சென்னையில் 17ந் தேதி ‘கல்வி வாய்ப்பு கண்காட்சி’ : அமெரிக்க அரசு ஏற்பாடு

சென்னை, ஆகஸ்ட் 13-

அமெரிக்கவில் உயர்கல்வியைத் தொடர்வது சம்பந்தமாக அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ தகவல்   அமைப்பான எஜுகேஷன் யுஎஸ்ஏ (EducationUSA) இந்தியா முழுவதும் கல்வி வாய்ப்பு  கண்காட்சியை நடத்துகிறது. இம்மாதம் 16ந் தேதி ஐதராபாத்தில் தொடங்கி 25ந் தேதி அன்று புதுடெல்லியை முடிவடையும் வகையில், 8 கண்காட்சிகளை நாடு முழுவதும் நடத்துகிறது.

சென்னையில் 17ந் தேதி அன்று ஓட்டல் ஹில்டனில் மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை இக்கண்காட்சி நடைபெறும்.

இளநிலை, முதுநிலை மற்றும் முனைவர் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள், அமெரிக்கா முழுவதிலும் உள்ள 80க்கும் மேற்பட்ட அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். இக்கண்காட்சியில் பங்கேற்புக் கட்டணம் இல்லை, ஆனால் பதிவு செய்தல் அவசியம். மேலும் விவரங்களுக்கும் பதிவு செய்துகொள்வதற்கும் https://bit.ly/EdUSAFair24Emb என்னும் முகவரியில் பார்வையிடலாம்.

கல்விக் கண்காட்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எரிக் கார்செட்டி, “எஜுகேஷன் யுஎஸ்ஏ நடத்தும் இந்த கண்காட்சிகள் அமெரிக்கா வழங்கும் அற்புதமான கல்வி வாய்ப்புகள் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கான சிறந்த வழியாகும். மாணவர்கள் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை அல்லது வணிகம் ஆகிய எந்தத் துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்தாலும், உங்கள் கனவுகளை அடைவதற்கு உதவக் கூடிய படிப்பு இங்கு உள்ளது என்றார்.

பெரிய அளவிலான அமெரிக்கக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் பிரதிநிதிகளைச் சந்திப்பதற்கும், கல்லூரி விண்ணப்பம் மற்றும் விசா செயல்முறை பற்றிய தகவல் அமர்வுகளில் கலந்து கொள்வதற்குமான வாய்ப்புகளையும் இக்கண்காட்சிகள் வழங்குகிறது.

மாணவர் சேர்க்கைகள், அவர்களுக்கான உதவித்தொகைகள், வளாக வாழ்க்கை, அமெரிக்காவில் கல்வி பெறுவது குறித்த பல தகவல்களை மாணவர்கள் நேரடியாகப் பெறலாம். அமெரிக்காவில் பயில்வது குறித்த கனவை நனவாக்குவதற்குத் தேவையான அனைத்து தகவல்களையும் உதவிகளையும் மாணவர்களும் அவர்களது குடும்பத்தினரும் பெறுவதை உறுதி செய்வதே எங்கள் குறிக்கோள்” என்றும் அவர் கூறினார்.

“எஜுகேஷன் யுஎஸ்ஏ” என்பது 175க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 430க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர் ஆலோசனை மையங்களைக் கொண்ட அமெரிக்க அரசுத் துறை அமைப்பு ஆகும். இந்தியாவில், புதுடெல்லி, சென்னை, கொல்கத்தா, மும்பை, ஐதராபாத் ஆகிய 5 நகரங்களில் உள்ள 6 மையங்கள் மூலம் எஜுகேஷன் யுஎஸ்ஏவின் ஆலோசனை சேவை வழங்கப்படுகிறது. இது பற்றி மேலும் www.educationusa.in தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *