சியோல், நவ. 05
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கடல்வழியாக நீண்டு தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தாக்குதலை, வட கொரியா நடத்தியுள்ளதாக தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5 ந்தேதி) இந்திய நேரப்படி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. அடுத்த அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவி வருகிறது. இந்நிலையில் வடகொரியா, கடல்வழியாக நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணை தாக்குதல் பரிசோதனையை நடத்தியுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், கிழக்கு கடற்கரையில் வடகொரியா ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதாக தென்கொரிய ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
தென்கொரிய கூட்டுப் படைத் தலைவர்கள் எவ்வளவு ஏவுகணைகள் வீசப்பட்டன, ஏவுகணைகள் எவ்வளவு தூரம் பறந்தன என்பது குறித்த எந்தத் தகவல்களும் இன்னும் வெளியாகவில்லை. வடகொரியாவால் ஏவப்பட்ட ஏவுகணைகள் கடலில் விழுந்ததா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.