செய்திகள்

அமெரிக்கா, சீனாவை விஞ்சிய இந்தியா: 93 நாளில் 12 கோடியே 38 லட்சம் பேருக்கு தடுப்பூசி

புதுடெல்லி, ஏப்.19-

இந்தியா 93 நாட்களில் 12 கோடியே 38 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளது. இதனால் 93 நாட்களில் அதிகமான தடுப்பூசி செலுத்திய நடுகளில் இந்தியா அமெரிக்காவையும் சீனாவை யும் விஞ்சியுள்ளது.

இன்று காலை 7 மணி நிலவரப்படி இந்தியாவில் 93 நாட்களில் 12 கோடியே 38 லட்சத்து 52 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் வாரத்தில் அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தடுப்பூசி திட்டம் ஜனவரி மாதம் 16-ந் தேதி நடைமுறைக்கு வந்தது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்கள பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். அடுத்து 60 வயதுக்கு மேற்பட்டவர்களும், 45 வயதுக்கு மேற்பட்டவர்களும் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இந்த எண்ணிக்கையிலான தடுப்பூசியை செலுத்துவதற்கு அமெரிக்காவில் 97 நாட்களும், சீனாவில் 108 நாட்களும் ஆயின. எனவே இவ்விரு நாடுகளைக் காட்டிலும் இந்தியா தடுப்பூசி போடுவதில் முன்னே சென்றுக்கொண்டிருப்பது நிரூபணமாகி இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *