வர்த்தகம்

அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூரில் பிட்டர் உடற்பயிற்சி நிறுவனத்துக்கு புதிய மையம்

சென்னை, செப். 27

உடல் நலம் மற்றும் உடற்பயிற்சி நிறுவனமான பிட்டர், அதன் மூலதனத்தை 11.5 மில்லியன் டாலர் உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது. இந்நிறுவனத்தில் ட்ரீம் கேபிடல் மற்றும் எலிசியன் பார்க் வென்ச்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. தற்போதுள்ள முதலீட்டாளரான சீக்வோயா கேபிடல் இந்தியாவும் இந்த நிதி திரட்டல் சுற்றில் பங்கேற்றது. இதற்காக பிட்டரின் பிரத்யேக நிதி ஆலோசகராக அம்பித் செயல்பட்டார்.

பிட்டர் நிறுவனத்தால் திரட்டப்பட்ட இந்த புதிய மூலதனம் புதிய சந்தையில் அதன் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை துரிதப்படுத்த பயன்படுத்தப்பட உள்ளது. இந்த விரிவாக்கமானது வட அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது திரட்டப்பட்டுள்ள இந்த நிதி இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாயில் 30 சதவீதம் ஆகும். இந்நிறுவனம் இந்திய மக்களுக்கு சுகாதாரம் மற்றும் உடற்பயிற்சி சம்பந்தமான பல்வேறு பயிற்சிகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

இது குறித்து பிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிறுவனருமான ஜிதேந்திர சவுக்சே கூறுகையில், உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கும், உடல், மனம் மற்றும் உணர்வுப்பூர்வ நல்வாழ்விற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பிட்டர் நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. எலிசியன் பார்க் வென்ச்சர்ஸ் மற்றும் ட்ரீம் கேபிடல் நிறுவனங்கள் எங்களுடன் இணைவதன் மூலம். லட்சக்கணக்கான மக்களுக்கு உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி அளிக்க முடியும் என்று அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *