செய்திகள்

அமெரிக்காவுடனான ராணுவ பயிற்சி இந்தியாவின் உரிமை சார்ந்த ஒன்று

3 ஆம் தரப்புக்கு அதிகாரமில்லை என சீனாவுக்கு வெளியுறவுத் துறை பதில்

டெல்லி, டிச. 4–

அமெரிக்காவுடனான ராணுவப் பயிற்சி என்பது இந்தியாவின் தனிப்பட்ட உரிமை என்பதால் மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை என்று, சீனாவிற்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

உத்தரகாண்டில் உள்ள இந்திய – சீன எல்லை கட்டுப்பாடு கோடு அருகே, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெற்று வரும் ராணுவ பயிற்சியானது இந்தியா மற்றும் சீனா இடையேயான தேர்வு ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது என சீனா அதிருப்தி தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி சீனாவிற்கு கொடுத்துள்ள பதிலில், அமெரிக்காவுடன் தற்போது நடைபெற்று வரும் ராணுவ பயிற்சிக்கும், இந்திய – சீன ஒப்பந்தத்திற்கும் எந்தவிதமான தாக்கமும் இல்லை.

அதிகாரம் இல்லை

மேலும் இந்தியா எந்த நாட்டுடன் ராணுவ பயிற்சி நடத்துகிறது. யாருடன் நடத்தவில்லை என்பது இந்தியாவின் உரிமையாகும். இந்த உரிமையை எந்த மூன்றாம் தரப்பும் அதிகாரம் செய்ய முடியாது. ஏனென்றால் எங்கள் ராணுவ பயிற்சியில் மூன்றாம் தரப்பினருக்கு அதிகாரம் இல்லை.

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே லடாக்கில் நிலவிவரும் முட்டுக்கட்டை மற்றும் அமைதி பற்றி பல நிலைகளில் நடைபெறும் முயற்சி நல்ல பலனை தரும் என எதிர்பார்க்கின்றோம். மேலும் சீனாவில் விதிக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு இந்தியா எந்த விதமான கருத்தும் கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *