வாஷிங்டன், பிப். 9–
அமெரிக்காவில் வசிக்கும் பிரிட்டன் இளவரசர் ஹாரியை நாடு கடத்த விரும்பவில்லை என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். பிரிட்டன் இளவரசர் ஹாரி, மனைவி மேகனுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவர், தனது சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ என்ற புத்தகத்தில், தான் பலவிதமான போதைப்பொருட்களை சோதித்துப் பார்த்ததாகக் கூறியிருந்தார். ஆனால், போதைப்பொருள் பயன்படுத்தி இருக்கும் பட்சத்தில் அவருக்கு அமெரிக்கா விசா கொடுத்திருக்க முடியாது. இதனையடுத்து, ஹாரி, தனது விசா விண்ணப்பத்தில் தனது போதைப்பொருள் பயன்பாடு குறித்து பொய் கூறியுள்ளாரா என ‘தி ஹெரிடேஜ்’ என்ற தொண்டு நிறுவனம் கேள்வி எழுப்பி இருந்தது. இது குறித்து அமெரிக்க அரசுக்கு எதிராக அந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.