செய்திகள்

அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு

நியூயார்க், ஜன. 30–

அமெரிக்காவில், பர்டியூ பல்கலைகழகத்தின் ஜான் மார்ட்டின்சன் ஹானர்ஸ் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா, காணாமல் போன நிலையில் கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்துள்ளார்.

அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய மாணவர்களின் இறப்பு தொடர்ந்து வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த நீல் ஆச்சார்யா, பர்டியூ பல்கலைக் கழகத்தின் ஜான் மார்ட்டின்சன் ஹானர்ஸ் கல்லூரியில், முதுநிலை கணினி அறிவியல் பயின்று வந்துள்ளார். இந்நிலையில், நீல் ஆச்சார்யாவின் தாய் கௌரி தனது மகன் ஞாயிற்றுகிழமையிலிருந்து காணவில்லை என்றும், அவரை பற்றி தகவல்கள் தெரிந்தால், எங்களுக்கு உதவுங்கள் எனவும் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு மாணவர் பலி

மேலும், கடைசியாக தனது மகனை கார் ஓட்டுநர் கல்லூரி வளாகத்தில் பார்த்தாகவும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், பல்கலைகழகத்தின் வளாகத்தில் மாணவர் ஒருவர் இறந்து கிடந்துள்ளார். பின்னர் அது நீல் ஆச்சார்யாதான் என பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து கணினித் துறையின் தலைவர் கிறிஸ் கிளிஃப்டன் கூறும்போது, ‘எங்கள் மாணவர்களில் ஒருவரான நீல் ஆச்சார்யா இறந்துவிட்டார் என்பதை நான் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சிகாகோவில் உள்ள இந்திய தூதரகம் மாணவரின் குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

ஏற்கனவே, இந்திய மாணவன் விவேக் சைனி அமெரிக்காவில் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், மற்றொரு மாணவரான நீல் ஆச்சார்யாவின் மரணமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *