செய்திகள்

அமெரிக்காவில் மருத்துவராக ஆங்கிலம், பேச, எழுத கேட்க தேர்வு நடத்தும் ஓ.இ.டி. அமைப்பு

சென்னை, ஆக. 4–

இந்தியாவிலிருந்து அமெரிக்காவில் மருத்துவராக, நர்ஸாக பணிபுரிய அந்த நாட்டு நிர்வாகம் சில சலுகை அளித்துள்ளது. இருந்தாலும் அந்த மருத்துவர்கள் நோயாளியிடம் பேச, கூறுதை கேட்க, மருந்து குறிப்புகளை எழுத ஓ.இ.டி. அமைப்பு தேர்வு நடத்துகிறது. இது சர்வதேச அமைப்பான வெளிநாட்டு பட்டதாரிகள் கல்வி ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

ஓ.இ.டியின் தலைமை நிர்வாக அதிகாரி சுஜாதா ஸ்டெட், அமெரிக்காவில் ஓ.இ.டி. தேர்வு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். ‘‘உலகம் முழுவதும் உள்ள மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்கள் அமெரிக்காவில் உள்ள சுகாதாரத்துறையில் பணிப்புரிய விரும்பினால் அவர்கள் ஓ.இ.டி. தேர்வை எழுதுவதன் மூலம் இது சாத்தியமாகும். ஓ.இ.டி. தேர்வானது நிஜ வாழ்க்கையின் அன்றாட தகவல் தொடர்பு திறன்களை பிரதிபலிப்பதோடு, மருத்துவத் துறையில் பணியாற்றுவதற்கு தேவையான மொழித் திறன்களை எதிர் கொள்ளவும், அவர்களது பணி தொடர்புடைய திறன்களை வளர்க்கவும் உதவுகிறது.’’ என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *