வாஷிங்டன்:
மத்திய அட்லாண்டிக் பெருங்கடலில் உருவான சூறாவளி புயலால், அமெரிக்காவின் 10 மாகாணங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனால் 2600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கனமழை காரணமாக பல இடங்களில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதால், 10 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. குறிப்பாக தலைநகர் வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட மாகாணங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
2600-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 7,700 விமானங்கள் தாமதமாக வந்தன. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.
புயல் தொடர்பாக, தேசிய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: சூறாவளி, ஆலங்கட்டி மழை, மின்னல் உள்ளிட்ட அபாயங்கள் இருப்பதால் மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும். ஆற்றின் கரையோரம் வசிப்பவர்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தப்பட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.