செய்திகள்

அமெரிக்காவில் கொடிய சிறைச்சாலை மீண்டும் திறப்பு !

Makkal Kural Official

அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவு

நியூயார்க், மே 6–

கலிபோர்னியா மாகாணத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்னர் மூடப்பட்ட, கொடிய அல்காட்ராஸ் சிறைச்சாலையை மீண்டும் திறக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவின் மோசமான சிறைச்சாலைகளில் ஒன்று அல்காட்ராஸ் சிறை. இந்த சிறைச்சாலை 1912-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்த நிலையில் கடந்த 1963-ம் ஆண்டு மூடப்பட்டது. இதைத் தொடர்ந்து அல்காட்ராஸ் சிறைச்சாலை அமைந்துள்ள சிறு தீவு தற்போது ஒரு சுற்றுலாத் தளமாக செயல்பட்டு வருகிறது.

சான் பிரான்சிஸ்கோவில் கோல்டன் கேட் பாலத்துக்கு அருகே இது அமைந்துள்ளது. இந்த நிலையில் பழைய சிறைச்சாலையான அல்காட்ராஸை மீண்டும் திறந்து விரிவுபடுத்த உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொடிய சிறைச்சாலை

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “அமெரிக்கா நீண்டகாலமாக கொடிய மற்றும் வன்முறை குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது அல்காட்ராஸ் சிறைச்சாலையை புனரமைத்துத் திறக்க உத்தரவிட்டுள்ளேன். அல்காட்ராஸ் சிறைச்சாலையை திறப்பது சட்டம், ஒழுங்கு மற்றும் நீதியின் அடையாளமாக திகழும்.

சிறையைத் திறக்க சிறைத்துறை, நீதித்துறை, எஃப்பிஐ மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். இந்தச் சிறைச்சாலை அமெரிக்காவின் மிகவும் இரக்கமற்ற மற்றும் வன்முறை குற்றவாளிகளை சிறை வைக்கும்” என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *