வாஷிங்டன், ஆக. 5
குரங்கு அம்மை தொற்று நோயை பொது சுகாதார அவசர நிலையாக அமெரிக்கா பிரகடனம் செய்துள்ளது.
கொரோனா தொற்றுக்கு மத்தியில் இப்போது குரங்கு அம்மையும் உலக அளவில் பரவி வருகிறது. உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையை உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் குரங்கு அம்மை பரவல் தீவிரமடைந்து வருவதால் மாகாண அரசுகள் ஒன்றன் பின் ஒன்றாக மருத்துவ அவசர நிலையை பிரகடனம் செய்து வந்தன. நியூயார்க், இலினாய்ஸ், கலிபோர்னியாவில் மருத்துவ அவசர நிலையை அறிவித்துள்ளன. இந்நிலையில் குரங்கு அம்மை நோயை அமெரிக்கா பொது சுகாதார அவரச நிலையாக நேற்று அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்துள்ளது
இது குறித்து அமெரிக்க அதிபருக்கான மருத்துவ துறை ஆலோசகர் அந்தோணி பவுசி கூறியிருப்பதாவது:–
குரங்கு அம்மை நோயை எதிர்கொள்வதற்கு அனைவரது கரங்களும் தயாராகிவிட்டன. குரங்கம்மை தடுப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதால் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் முழு கவனத்தையும் செலுத்த முடியும். மருத்துவ நடவடிக்கைகளை நாடு முழுவதும் விரைவு படுத்தலாம்.