செய்திகள்

அமெரிக்காவில் இந்திய மருத்துவ மாணவர் சுட்டுக்கொலை

வாஷிங்டன், நவ. 24–

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் 26 வயதான இந்திய மருத்துவ மாணவர் காருக்குள் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக அவர் பயின்ற சின்சினாட்டி மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

ஆதித்யா அத்லக்கா (26) அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி மருத்துவ பல்கலைக்கழகத்தில் மூலக்கூறு மற்றும் வளர்ச்சி உயிரியல் பிரிவில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். இச்சம்பவம் குறித்து சின்சினாட்டி நகர போலீசார் கூறியதாவது:–

கடந்த 9ம் தேதி காருக்குள் ஒரு நபர் சுடப்பட்டிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து அவர் மீட்கப்பட்டு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்றனர்.

இச்சம்பவம் குறித்து பல்கலைக்கழகத்தின் முதல்வர் ஆண்ட்ரியு பிலக் கூறியதாவது:–

அனைவரிடமும் அன்பாக பழகும் ஆதித்யா மிகச்சிறந்த மாணவர். குடற்அழற்சி குறித்த அவரின் ஆராய்ச்சிகள் வியக்கத்தக்கவை. அவர் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் மற்றும் நண்பலடகளுக்கு பல்கலைக்கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இச்சம்வத்தில் தொடர்புடையவர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என உள்ளூர் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *