செய்திகள்

‘‘அமெரிக்காவில் அனைவருக்கும் மே 1ந் தேதிக்கு முன் தடுப்பூசி போடப்பட்டுவிடும்:’’ அதிபர் பிடன் உறுதி

வாஷிங்டன், மார்ச். 12

அமெரிக்காவில் உள்ள வயதுக்கு வந்த அனைவருக்கும் மே 1ந்தேதிக்கு முன் கொரோனோ தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்கள் முன் இன்று பேசும்பொழுது கூறியதாவது: ‘‘கடந்த ஓராண்டுக்கு முன் நாம் ஒரு வைரசால் பாதிக்கப்பட்டோம். அமைதியாக, கவனிக்கப்படாமல் அது பரவியது. பல நாட்களாக, வாரங்களாக பின்னர் மாதங்களாக அது இல்லை என கூறி கொண்டே இருந்ததில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளன.

அதிக மனஅழுத்தம் மற்றும் தனிமை ஆகியவை ஏற்பட்டது. ஒவ்வொருவருக்கும் இது வேறுபட்ட நிலையை ஏற்படுத்தியதுடன், நாம் அனைவரும் சிலவற்றை இழந்து விட்டோம். ஒரு கூட்டு தியாகம். இருளில் வெளிச்சம் தேடுவது என்று அமெரிக்கர்கள் பலரும் செய்து வருகிறோம்.

அமெரிக்காவில் உள்ள வயதுக்கு வந்த அனைவருக்கும் வருகிற மே 1ந்தேதிக்கு முன் கொரோனோ தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்படும்.

மே 1ந் தேதிக்கு முன் இப்படி தடுப்பூசி போடப்பட்டு விட்டால்.. மக்கள் தங்கள் குடும்பம் உற்றார் உறவினர்களோடு ஜுலை அமெரிக்க சுதந்திரத்தை மகிழ்ச்சியாகவும், கோலா கலமாகவும் கொண்டாட முடியும்.

உள்ளூர் மக்களைத் தேடி நடமாடும் மருந்தகங்கள் சென்று தடுப்பூசி போடும்.

கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் தொடர்ந்து முகக்கவசம் அணிய வேண்டும். கைகளை சுத்தமாக கிருமிநாசினி கொண்டு கழுவ வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடிக்க வேண்டும்.

கொரோனா பாதிப்புகளால் இன்று வரை உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை அடங்கிய அட்டை ஒன்று எனது சட்டை பையில் உள்ளது. அது மனதுக்கு கடினம் அளிக்க கூடியது என உண்மையில் எனக்கு தெரியும்.

அமெரிக்காவில் இதுவரை மொத்த உயிரிழப்பு 5 லட்சத்து 29 ஆயிரம் பேர் இந்த எண்ணிகை, முதல் உலக போர், இரண்டாம் உலகப் போர், வியட்னாம் போர் மற்றும் இரட்டை கோபுர தாக்குதல் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக்கையை விட மிக அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *