செய்திகள்

அமெரிக்காவின் 4 மாகாணங்களை புரட்டிப் போட்ட ‘டெரெகோ’ சூறாவளி: 2.70 லட்சம் வீடுகளில் மின் துண்டிப்பு

வாஷிங்டன், ஜூலை 2–

அமெரிக்காவின் 4 மாகாணங்களில் 3 நாட்களுக்கு முன்னர் தாக்கிய கடுமையான சூறாவளியால் மின் கம்பங்கள், வீடுகள் சேதமடைந்த நிலையில், சுமார் 2.70 லட்சம் வீடுகள் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் மூழ்கின.

அமெரிக்காவின் இண்டியானா, இல்லினாய்ஸ், டென்னசி மற்றும் ஜார்ஜியா ஆகிய மாகாணங்களில் கடந்த 3 நாட்களுக்கு முன் வீசிய டெரிகோ சூறாவளியால் அமெரிக்காவின் நான்கு மாகாணங்களில் கிட்டத்தட்ட 270,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆபத்தான ரெரெகோ புயலின்போது, காற்று 100 மைக் வேகத்தை விட அதிகமாக இருந்துள்ளது. அமெரிக்காவின் மத்திய மேற்கு பகுதியில் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் வீசிய சூறாவளி புயல் காற்றால் மரங்கள், ஆயிரக்கணக்கான மரங்கள், மின் கம்பங்கள் விழுந்துள்ளன.

ஒருவாரத்துக்கு நீடிக்கும்

ஏராளமான வீடுகள் சேதமடைந்தன. இந்த சூறாவளி மத்திய அமெரிக்கா முழுவதும் பேரழிவை ஏற்படுத்தியது. பல இடங்களில் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டன. நெடுஞ்சாலையின் குறுக்கே மின் கம்பிகள் சாய்ந்ததால், மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தற்காலிகமாக மூடப்பட்டது. இல்லினாய்ஸில் வீசிய பலத்த புயல் விவசாய நிலங்களையும், வீடுகளையும் பந்தாடியுள்ளது. ஏராளமான பயிர்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. எனினும், உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

இல்லினாய்ஸில் 106,000 வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இண்டியானாவில் 141,000 க்கும் மேற்பட்டோர் மின்சாரம் தொடர்பான பிரச்சனைகளை சந்தித்தனர். அதே நேரத்தில் டென்னசி மற்றும் ஜார்ஜியாவில் 27,000 க்கும் மேற்பட்ட வீடுகளில் மின்சார இணைப்பு பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் வரை மின்சாரத்தை மீட்டெடுக்க முடியாது, இதே நிலை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *