செய்திகள்

அமெரிக்காவின் பொய் எடுபடவில்லை: புதினுக்கு 82 சதவீத ரஷ்ய மக்கள் ஆதரவு

கருத்துக் கணிப்பில் தகவல்

மாஸ்கோ, ஏப். 9–

ரஷ்யாவில் அதிபர் புடினுக்கான ஆதரவு, 67 சதவீதத்தில் இருந்து 82 சதவீதமாக அதிகரித்து உள்ளது என கருத்து கணிப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடந்து வருகிறது. உக்ரைன் – ரஷ்யா இடையிலான 5 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு, போர் வேகம் குறைந்துள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவின் ராணுவ வீரர்களே தங்கள் நாட்டு அரசு மீது, கடும் கோபத்தில் இருப்பதாக செய்திகளை பரப்பியது. அதாவது, அதிபர் புதினுக்கு எதிராக ரஷ்யாவில் மக்கள் கோபத்தில் இருப்பதாக மேற்கு உலக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டன.

ஆனால் ரஷ்யாவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் வேறு மாதிரியான முடிவுகள் வெளியாகி உள்ளது. ரஷ்ய மக்களின் கருத்தாய்வு என்ற (Russian Public Opinion Research Center) என்ற அமைப்பு, அதிபருக்கான் அப்ரூவல் ரேட்டிங் குறித்த கருத்து கணிப்புகளை எப்போதும் வெளியிடும். அதிபருக்கு எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பது தொடர்பான கருத்து கணிப்புகளை வெளியிடும்.

புதினுக்கு அதிகரித்த ஆதரவு

இந்த நிலையில் ரஷ்ய அதிபர் புதின் பற்றி வெளியாகி உள்ள கணிப்பில், புதினின் அப்ரூவல் ரேட்டிங் 67.2 சதவிகிதத்தில் இருந்து 81.6 சதவிகிதமாக உயர்ந்து உள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது பிப்ரவரி 24ம் தேதி போர் தொடங்கிய நாளில் அவருக்கான மக்கள் ஆதரவு 67.2 சதவிகிதமாக இருந்தது. தற்போது அவருக்கான ஆதரவு 81.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

முன்னதாக ரஷ்ய அதிபர் புடினை 24.4 சதவிகிதம் பேர் எதிர்த்து உள்ள நிலையில், தற்போது 12.9 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. சரியாக போர் நடக்கும் கடந்த ஒன்றரை மாத காலகட்டத்தில் இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டு உள்ளது.

2014ல் கிரிமியாவை ரஷ்யா கைப்பற்றிய போதும் புடினின் ஆதரவு பெருகியது குறிப்பிடத்தக்கது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு உலக நாடுகள் புதினுக்கு எதிராக ரஷ்யாவில் மக்கள் புரட்சி செய்வார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், புதின் தனக்கான ஆதரவை போர் மூலமே உயர்த்தி இருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published.