செய்திகள்

அமெரிக்காவின் புளோரிடா துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் காயம்

புளோரிடா, ஜன. 31–

அமெரிக்காவின் புளோரிடா நகரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் புளோரிடா ப்ளம் நகரில் அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3.43 மணிக்கு நடந்துள்ளது.

போலீஸ் விசாரணையின்படி சம்பவ இடத்தில் நின்றிருந்த ஒரு நீல நிற காரில் இருந்த 4 பேர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. அந்தக் காரின் 4 ஜன்னல்களும் ஒரே நேரத்தில் இறக்கிவிடப்பட்டு துப்பாக்கிச் சூடு ஒரே நேரத்தில் நடத்தப்பட்டுள்ளது. ஆண்களைக் குறிவைத்தே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பின்னர் அந்த இடத்தில் இருந்து அந்தக் கார் வேகமாக சென்றுள்ளது. சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய அந்தக் காரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜனவரி 21–ந்தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் துப்பாக்கிச் சூடு நடந்தது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக் கொண்டிருந்தபோது இந்த துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

அதனைத் தொடர்ந்து கடந்த 23–ந்தேதி அமெரிக்காவில் வடக்கு கலிபோர்னியா, அயோவா, சான் பிரான்சிஸ்கோ உள்பட 3 இடங்களில் நடந்த வெவ்வேறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 2 மாணவகள் உள்பட 9 பேர் பலியாகினர். தற்போது புளோரிடாவில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *